அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்திலிருந்து 2284 மாணவர்கள் தோற்ற்றுகின்றனர்..


ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நாடளாவிய ரீதியில் 3,014 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 

அத்துடன் நாளை 20.08.2017 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமை பரிசுப்பரீட்சையில் மன்னார் மாவட்டத்திலிருந்து 28 பரீட்சை நிலையங்களில் 2284 மாணவர்கள் தோற்ற இருக்கின்றனர்

இந்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்காக மூன்று லட்சத்தி ஐம்பத்தி ஆறாயிரத்து எழுநூற்றி இருபத்தி எட்டு மாணவ, மாணவிகள் தோற்றவுள்ளனர்.

இதற்கிடையே இந்த ஆண்டு விசேட தேவையுடைய மாணவர்கள் ஐநூற்றி அறுபத்தி இரண்டு பேரும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை ஆரம்பிக்கும் காலை ஒன்பது மணிமுதல் பரீட்சையின் இரண்டாம் வினாத்தாளுக்கான நேரம் முடிவடையும் வரை பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் தவிர பரீட்சை நடைபெறும் பாடசாலைகளின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களோ, பரீட்சார்த்திகளின் பெற்றோர் உள்ளிட்ட வெளிநபர்கள் யாரும் பரீட்சை மண்டபம் அமைந்திருக்கும் பகுதிகளில் உட்பிரவேசிக்கவோ, நடமாடவோ அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

  மாணவமாணவிகளுக்கு

  • குறித்த நேரத்துக்கு பரீட்சை மண்டபத்துக்கு செல்லுங்கள்.
  • பரீட்சைக்கு தேவையான உபகரங்களை எடுத்துச்செல்லுங்கள்.
  • வினாத்தாளில்  உள்ள கேள்விகளை நன்கு வாசியுங்கள்
  • தெரிந்த விடைகளை முதலில் எழுதுங்கள்.
  • தேவையற்ற சந்தேகங்கள் வேண்டாம்.
  • பயம் பதற்றம்  குழப்பங்களை தவிருங்கள்
  • முடிந்தவரை சரியாக எழுத்துப்பிழையின்றி எழுதுங்கள்
உங்களின் கற்றல் திறனும் கடவுளின் ஆசிர்வாதமும் உங்களோடு நீங்கள் வெற்றியோடு வாழ்த்துக்கள்.

பெற்றோருக்கு....
  • நாளை பரீட்சைக்கு பிள்ளைகளை இன்றே தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • உங்களின் குடும்பபிரச்சினைகளை பிள்ளைகள் மீது காட்டவேண்டாம்.
  • பரீட்சையில் சித்தியடைய வேண்டும் இல்லையேல்,,,,,அப்படி செய்வேன் ,,,,இப்படி ....செய்வேன் என எந்த காரணமும் சொல்லி மனதை குழப்பவோ திட்டவோ .....வெருட்டவோ .....வேண்டாம்.
  • குறித்த நேரத்துடன் பிள்ளையின் கடமைகளை முடித்து பரீட்சை மண்டபத்துக்கு அனுப்புங்கள். 

பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு......
  • பரீட்சை மண்டபத்தினுள் தங்களின் மேற்பார்வையில் பரீட்சை எழுதும் பிள்ளைகளின் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
  • நேரத்தினை நினைவு படுத்துங்கள் பயமுறுத்தாதீர்கள்
  •  பிள்ளைகளின் தேவைகளை காலக்கிரமத்தில் செய்துகொடுங்கள்
 இன்றைய சிறார்களின் கல்வியில் தான் எமது நாளைய தலைமுறை உருப்பெறும் அதற்கு  உறுதுணையாக இருப்போம் ஊறுவிளைவிக்காதீர்கள்

பரீட்சை எழுதும் அனைத்து மாணவமாணவிகளுக்கு  வெற்றி பெற நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துக்கள் கூறிநிற்கின்றோம்

மன்னார் மாவட்டத்திலிருந்து 2284 மாணவர்கள் தோற்ற்றுகின்றனர்.. Reviewed by Author on August 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.