அண்மைய செய்திகள்

recent
-

39 வருடங்களின் பின் ஆழ் கடலில் இருந்து வெளிவந்த படகு!


கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலம் கட்டுமான வேலை இடம்பெறும் போது நீரில் மூழ்கிய இழுவைப் படகு மன்னார் வளைகுடா கடலில் தென்பட்டுள்ளது.

குறித்த படகு நேற்று தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், இந்தியாவில் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றானதாகவும் காணப்படுகின்றது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பாம்பன் சாலை பாலம் கட்டப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமை்மையார் 1973 ஆம் ஆண்டு இந்த பாலத்திற்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளார்.

சுமார் இரண்டே கால் கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் கடலில் அமைக்கப்பட்டுள்ள 79 தூண்களால் தாங்கி நிற்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தினை கடந்த 1988 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 2 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்துள்ளார்.

அத்துடன், 1978 ஆம் ஆண்டு பாம்பன் பாலம் கட்டும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு புயலால் மூழ்கிய இழுவைப் படகு முழுமையாக நேற்றைய தினம் தென்பட்டுள்ளதுடன், இதனை இராமேஸ்வரம் சென்ற சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர்.


இது தொடர்பில் கடலியல் ஆய்வாளர் தாகிர் சைபுதீன் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய நெடுஞ்சாலை துறையினரால் பாம்பன் சாலை பாலப் பணிகள், தூத்துக்குடியை சேர்ந்த நீலமேகம் அன்ட் கோ என்ற நிறுவனம் சார்பாக இடம்பெற்றன.

1978 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தை புயல் தாக்கியது. இதன்போது பாம்பன் சாலை பாலம் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன.

விலை உயர்ந்த தளபாடங்கள் கடலுக்குள் மூழ்கின. இதற்காக நீலமேகம் அன்ட் கோ நிறுவனம் மத்திய அரசிடம் ரூபா 1 கோடி இழப்பீடு கோரியது.

ஆனால் நிவாரணம் வழங்கப்படாததால் அந்த நிறுவனம் பாம்பன் பாலம் கட்டும் பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டது.

இதன் பின்னர் மும்பையை சேர்ந்த கேமன் இந்தியா என்ற நிறுவனம் பாம்பன் சாலை பாலத்தை முழுமையாகக் கட்டி முடித்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதி உள்வாங்கும் போது 1978 ஆம் ஆண்டில் இராமேசுவரத்தை தாக்கிய புயலில் மூழ்கிய தனியார் நிறுவனம் பயன்படுத்திய தளபாடங்களில் சில தென்படக்கூடும்.

புயல் தாக்கத்தில் மூழ்கிய இழுவைப் படகின் முழுப்பாகமும் தெரிவது இதுவே முதல் முறை என கடலியல் ஆய்வாளர் தாகிர் சைபுதீன் குறிப்பிட்டுள்ளார்.

39 வருடங்களின் பின் ஆழ் கடலில் இருந்து வெளிவந்த படகு! Reviewed by Author on August 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.