அண்மைய செய்திகள்

recent
-

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு-Photos

மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை , கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திரு நாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.

இதன் போது மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதே வேளை நேற்று திங்கட்கிழமை(14) மதியம் முதல் மடுத்திருத்தலத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை(15) மடு அன்னையின் ஆவணி விண்ணேற்பு திரு நாளை வழக்கமான முறையில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று திங்கட்கிழமை மடு திருத்தலத்தில் இருந்து வெளியேறி இருந்தனர்.

-இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல்; இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை மழை பெய்யாத நிலையில் மடு திருத்தலத்தை சூழ தேங்கியிறுந்த மழை நீர் வற்றிய நிலையில் திருவிழா திருப்பலி இடம் பெறும் சூழல் ஏற்பட்டிருந்தது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

-திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல மணி நேரங்களின் பின்னரே பக்தர்கள் மடு திருத்தல பகுதியில் இருந்து பிரதான வீதியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 (படம்)


மன்னார் நிருபர்
(15-08-2017)



மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு-Photos Reviewed by NEWMANNAR on August 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.