அண்மைய செய்திகள்

recent
-

மீன் பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து நான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை-அமைச்சர் டெனிஸ்வரன்.-படம்


வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து தான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை எனவும், கட்சியோ அல்லது முதலமைச்சறோ எனக்கு பெரியவர்கள் இல்லை எனவும் அவர்கள் பெரியவர்களாக இருந்திருக்க முடியும் அவர்கள் நீதியின்பால் நின்றிருந்தால் எனஅமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

தனது நிலைப்பாடு குறித்து இன்று திங்கட்கிழமை(14) காலை மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,,,,

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் உயர் மட்ட கூட்டம் கட்நத 12 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா அலுவலகத்தில் இடம் பெற்றது.குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த கூட்டத்திற்குச் சென்று அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு எனது நிலைப்பாட்டினை தெழிவாக தெரிவித்தேன்.

எனினும் ஒரு சில தினங்களில் அமைச்சுப்பொறுப்பை விட்டுத்தருவது தொடர்பில் முடிவெடித்து தெரிவிக்குமாறு தெரிவித்தனர்.

இந்த நிலையில் எனது நிலைப்பாட்டினை இன்றைய தினம் தெரிவிக்கின்றேன்.அன்று எதை தெரிவித்தேனோ அதனை மீண்டும் தெரிவிக்கின்றேன்.

இன்று கூறுவதைத்தான் நான் என்றும் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.
எனது பக்கத்தில் இருக்கின்ற நியாயங்களை நிருபிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

முதலமைச்சர் அவர்களின் சில நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பாகவும், நேர்மையற்ற தன்மையாகவும் இருக்கின்றது. இதனை எந்த மட்டத்திற்கும் இறங்கி போராடுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

நானாக எனது சுய விருப்பதின் பேரில் இராஜினாமா கடிதத்தை கொடுப்பேன் என்றால் எதிர்காலத்தில் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கும்,பலரது போலி முகத்திரையினை கிழிப்பதற்கும் முடியாமல் போய்விடும்.
எனவே எனது கட்சியும்,முதலமைச்சரும் வேண்டும் என்றால் நீங்களாகவே என்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்குங்கள்.அதன் பின்னர் எனது நடவடிக்கை தொடரும்.

முன்னால் போராளிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள்.உங்களிடம் இருந்து நான் சில விடையங்களை எதிர்பார்க்கின்றேன்.

அமைச்சர் வாரியத்தில் சில மாதங்களாக விருப்பம் இல்லாமல் , ஆனால் அதே நேரம் எனது பக்கம் உள்ள சில நியாயங்களை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றேன்.

உண்மையில் மிகவும் வேதனைக்குறிய விடையம்.எமது இனம் சார்ந்த,இன விடுதலை அதே நேரம் மக்களின் எதிர்காலம் குறித்தும் இருக்கின்ற சில தலைவர்கள் சரியாக செயற்படுகின்றார்களா? என்பது கேல்விக்குறியாக இருக்கின்றது.

-கடந்த காலங்களில் எமது இனத்திற்காக எத்தனையோ உயிர்களை விதைத்திருக்கின்றோம்.உங்களது உயிர்களை துச்சமாக மதித்து எமது இனத்தின் விடிவிற்காக போராடியுள்ளீர்கள்.

-2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் எங்களுடைய போராளிகளும்,மாவீரர் குடும்பங்களும் குறிப்பாக கணவனை இழந்த பெண்களும் படுகின்ற கஸ்ட துன்பங்கள் அளவுக்கு அதிகமானது.

-எத்தனையோ தசாப்த காலமாக இருந்த எமது பெரியவர்கள் , அரசியல் ரீதியாக இருந்த தலைவர்கள் உங்கள் மட்டில் எவ்விதமான ஆக்கபூர்வமான ஒரு எதிர்காலத்தை அல்லது நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா?
-2009 ஆம் ஆண்டிற்கு பின்னராவது சில நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.குறிப்பாக அன்றாட உணவுக்கு கஸ்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலாவது.

எந்த விதத்திலும் இல்லை.வெறும் வாய்ப்பேச்சில் மட்டும் இருந்ததோ தவிர எவரும் அதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.வலி என்பது உதட்டில் இருந்து வரவேண்டியதொன்றல்ல. மனதில் இருந்து வரவேண்டியது. வலி வேதனைகளின் அடிப்படையில் தான் எனது வேளைத்திட்டம் அமைந்துள்ளது.

-மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல உயிர் அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் எங்களுடைய போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கான வேளைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தேன்.

-தற்போதும் குறித்த வேளைத்திட்டங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.இன்னும் 16 ஆயிரம் குடும்பங்கள் எனது வாழ்வாதாரத்திட்டத்தை எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.தற்போது என்னைப்பொருத்த மட்டில் எனது கட்சியோ அல்லது முதலமைச்சர் அவர்கலோ எனக்கு பெரியவர்கள் இல்லை.அவர்கள் பெரியவர்களாக இருந்திருக்க முடியும் அவர்கள் நீதியின் பால் நின்றிருந்தால்.நீதியாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் அவர்களின் காலடியில் நின்றிருப்பேன்.அவர்கள் கூறுவதை ஏற்று முன்னோக்கி நகர்த்தியிறுப்பேன்.

பதவி ஆசைகள் தான் மேலோங்கி நிற்கின்றது.ஆனால் மக்களின் எதிர்காலம் மற்றும் கடந்தகாலத்தில் இழக்கப்பட்ட உயிர் இழப்புகளுக்கு அர்த்தம் தேடுகின்றவர்களாக பலரை பார்க்க முடியாது இருக்கின்றது.ஆகவே நான் கேட்கின்றேன் தற்போது விருப்பம் இல்லாமல் இந்த அமைச்சர் வாரியத்தில் இருக்கின்றேன்.

இதில் இருந்து கொண்டு நீதியை நிலை நாட்டுவதற்கு நான் போராடுவதா?அல்லது வெளியில் வந்து போராடுவதா என்பதனை எமது இனத்துக்காக உயிரைக்கொடுக்க முன் வந்த நீங்கள் மற்றும் உயிரைக்கொடுத்த மாவீரர் குடும்பங்கள் சிந்தியுங்கள்.

நீங்கள் சரியாக நேர்மையாக சிந்திக்கக்கூடியவர்கள்.அவ்வாறு சிந்திக்கக்கூடிய இடத்தில் இருந்து வளர்க்கப்பட்டவர்கள்.ஆகவே உங்களின் கைகளில் விடுகின்றேன் நான் அமைச்சர் வாரியத்தில் தொடர்ந்து இருப்பதா?இராஜினாமா செய்வதா? நீதியை நிலை நாட்டுவதற்கு போராடுவதா?என்று நீங்கள் முடிவு சொல்லுங்கள்.எனது முடிவு உங்களின் கைகளில் என அவர் மேலும் தெரித்தார்.
மீன் பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து நான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை-அமைச்சர் டெனிஸ்வரன்.-படம் Reviewed by NEWMANNAR on August 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.