அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிய கிழக்கு மாகாண சபை....


நாட்டில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபை அவசர தீர்மானமொன்றை நிறைவேற்றி அதற்கான நிதியாக 09 மில்லியன் ரூபாவினை கிழக்கு மாகாண சபை சேகரித்து மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்த்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டடுள்ளதுடன், மாத்தறை, தெனியாய தொகுதிய மற்றும் பிட்டபெத்தர பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்தவர்களுக்கான கட்டட பொருட்கள் மற்றும் உயிர் இழந்தவர்களுக்கான உதவிகள் வழங்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், உத்தியோகஸ்தர்களால் இந்த உதவி கையளிக்கப்ட்டுள்ளது.


இதன் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்

கிழக்கு மாகாணத்தில் அன்று சுனாமி அனர்த்தத்தின் போது இப்பிரதேச மக்கள் எங்களுக்காக உதவினார்கள் அது இப்பிரதேச மக்களின் உதவித்தன்மையை வெளிக்கொண்டு காட்டினார்கள்.

அன்று இவ்வாறான மக்களின் உதவிகளை நாம் மறக்க முடியாமல் இந்த விடத்தில் நன்றி கூறுகின்றோம். ஒரு மாகாணத்தில் சிக்கல்கள் இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும் அவ்வாறன உதவிகளை நாம் வழங்கி வருகின்றோம்.

இவ்வாறு ஒரு பாரிய அனர்த்தத்திற்குள் உள்ளான மக்களை பார்க்க வேண்டியது மக்கள் பிரநிதிகள் ஆகிய எங்களின் மிகப்பெரிய கடமையாகும்.

இவ்வாறன நிதிகளை திரட்டி இம்மக்களுக்காக உதவியகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர், கிழக்குமாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையின் கடையாற்றும் அதிகாரிகள்மற்றும் ஊழியர்கள் இதற்காக அர்ப்பணிப்புடன்செயற்பட்டு உதவியமைக்கு இந்த விடத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் சரத் அபேகுனவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ் உள்ளிட்டவர்களுடன் கிழக்கு மாகாணசபையின் உயர் அதிகாரிகளுடன், அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர் சாகல ரத்னாவின் வருகைக்கு பதிலாக அவரின் பிரத்தியேக செயலாளரும் கலந்து கொண்டு.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிய கிழக்கு மாகாண சபை.... Reviewed by Author on August 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.