அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் ஆக்காட்டி வெளி பிரதேசத்தில் உளள் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாருக்கும்,முன்னாள் போராளிகளுக்கும் இடையில் தர்க்க நிலை.(படம்)

ஜனநாயக போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை(18) காலை மன்னார் அடம்பன் ஆக்காட்டி வெளி பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறந்து வைப்பதற்கு முன், அப்பகுதியில் உள்ள ஆட்காட்டி வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 'மாவீரர் துயிலும் இல்லத்ததை' துப்பரவு செய்யும் பணி இடம் பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிள் மற்றும் போரட்டத்தில் உயிர் தியாகம் செய்த போரளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வடமாகாண ஜனநாயக போராளிகள் கட்;சியின் தலைமையில் மன்னார் ஆட்காட்டி வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்ததை துப்பரவு செய்யும் பணியில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை ஈடுபட்டனர்.

இதன் போது திடீர் என அங்கு வந்த அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் துப்பரவு செய்யும் பணி தடுக்கப்பட்டதோடு, அனைவரையும் கலைந்து செல்லுமாறும் அவர் தெரிவித்தார்.

எனினும் முன்னாள் போராளிகள் கலைந்து செல்ல முடியாது எனவும் , குறித்த துயிலும் இல்லத்தில் இறந்தவர்கள் எங்கள் இனத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் எனவும் எனவே இவர்களை நினைவு கூற வேண்டியது எங்கள் கடமை எனவும் எங்கள் ஜனநாயக உரிமையை எச்சந்தர்பத்திலும் விட்டுகொடுக்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் மாவீரர் துயிலும் இல்லத்ததை துப்பரவு செய்யும் பணி தொடர்பாக எந்த அனுமதியும் பொறப்படவில்லை எனவும் பிராந்திய பொலிஸ் நிலையத்துக்கு எந்த தகவளும் வழங்கபடவில்லை எனவும், எனவே இவ் துப்பரவு செய்யும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் அப்பகுதிக்கு வந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் முன்னாள் போராளிகள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் முறுகள் நிலை தோற்றம் பெற்ற நிலையில் முறுகள் நிலையை தொடர்ந்து ஆட்காட்டி வெளி பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனை கட்டுப்படுத்தும் முகமாக முன்னாள் போராளின் வேண்டுகேளுக்கு இணங்க 5 நிமிட நினைவஞ்சலி நிகழ்வை மட்டும் நடத்துவதற்கான அனுமதியை பொலிஸார் வழங்கியிறுந்தனர்.

ஆதனைத்தொடர்ந்து முன்னாள் போராளிகளினால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றப்பட்டு தமிழ் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை(18) காலை மன்னார் அடம்பன் ஆக்காட்டி வெளி பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













மன்னார் அடம்பன் ஆக்காட்டி வெளி பிரதேசத்தில் உளள் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாருக்கும்,முன்னாள் போராளிகளுக்கும் இடையில் தர்க்க நிலை.(படம்) Reviewed by NEWMANNAR on August 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.