அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வடியில் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் மர்மப்பொருட்களை தேடி நீதவான்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவூடாக மன்னார் நீமிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று (11) வெள்ளிக்;கிழமை மதியம் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பேசாலை 4 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று விசாரனையினை மேற்கொண்டனர்.

-பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கடந்த 8 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு,நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

-இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் குறித்த மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

-இதன் போது அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,பொலிஸ்,இராணுவ அதிகாரிகள் உற்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

-முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் பெக்கொ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் ஆராம்பமானது.

எனினும் குறித்த அகழ்வின் போது ஒரு சில உலோகப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதும்,எவ்விதமான மர்மப்பொருட்களும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







பேசாலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வடியில் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் மர்மப்பொருட்களை தேடி நீதவான் Reviewed by NEWMANNAR on August 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.