அண்மைய செய்திகள்

recent
-

மன்/ பெரியமடு ஆரம்ப பாடசாலைக்கானகட்டிட தொகுதி திறப்பு விழா...


மன்/ பெரியமடு மகா வித்தியாலத்துடன் இயங்கிவந்த மன்/ பெரியமடு ஆரம்ப பாடசாலைக்கான புதிய வளாகத்திற்கான புதிய கட்டிட தொகுதி  5/8/2017 சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில்
கௌரவ றிசாட் பதியுதீன் ( பா.உ ) அமைச்சர் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில்.....
கௌரவ றிவ்ஹான் பதியுதீன் வடக்கு மகாணசபை உறுப்பினர் அவர்களும்
திருமதி. L. மாலினி வெனிற்றன் வலய கல்விப் பணிப்பாளர், மடு கல்வி வலயம் அவர்களும்
Dr. Chanaka Talpahewa, Country Programme Manager, UN- Habitat. அவர்களும்
திரு. I. A. ஹமீட் சீனியர் அட்வைசர் UN-Habitat அவர்களும் கலந்துகொண்டு திறப்பு விழா நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை திறப்பு விழா நடைபெற்ற மன்/ பெரியமடு ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு.M. இமாம் ஹன்பல் அவர்கள் தலைமை ஏற்று நடத்தியிருந்தார் அத்துடன் மன்/பெரியமடு மகா வித்தியாலயத்தின் அதிபர்
திரு. T. குலதீபன் அவர்களும் கலந்து கொண்டு பாடசாலையின் வரலாறு பற்றி உரையாற்றியிருந்தார்.

அத்துடன் மடு கல்வி வலய பணிப்பாளர் தனது உரையில் விசாலமான வசதிகள் நிறைந்த நவீன பாடசாலை கட்டிடம் சிறு பராய மாணவர்களுக்கு பெற்று தந்தமைக்காக விசேட நன்றிகளை கூறினார்.
கௌரவ றிசாட் பதியுதீன் ( பா.உ ) அமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் பெரியமடு பழமை வாய்ந்த பசுமை நிறைந்த வளம் நிறைந்த விவசாய பூமி இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து விவசாய உற்பத்திகளை பெருக்கி வளமாக வாழுங்கள் தேவையான உதவிகளை நான் செய்கின்றேன் என்று கூறிய அவர் உங்கள் தொழிலை முழு மூச்சாக கவனிப்பதுடன் பிள்ளைகளின் கல்வியை முக்கியமாக கவனித்து நிறைய கல்விமான்களை உருவாக்குங்கள் என்று மிகவும் அன்பாக கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்களும் ஊர் அபிவிருத்தி தவலவர்களும் வலய கல்வி அலுவலர்களும் அயல் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் மன்னார்மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்
திரு.S.R. யதீஸ் அவர்களும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.









மன்/ பெரியமடு ஆரம்ப பாடசாலைக்கானகட்டிட தொகுதி திறப்பு விழா... Reviewed by Author on August 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.