அண்மைய செய்திகள்

recent
-

கல்லறை தேடி அலையும் இந்திய துணைதூதர்!

இந்திய ஆக்கிரமிப்பு படையினால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப்படுகொலை நினைவேந்தலை நடத்த விடாது தடுத்த யாழிலுள்ள இந்திய துணைதூதர் நட்ராஜ் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு 17 வருடங்களுக்கு பின்னர்; அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துவருகின்றார்.

யாழ்ப்பாணத்தினில் உயிர்நீத்த இந்திய படைகளிற்கான நினைவுதூபியொன்று பலாலி இராணுவதளத்திலுள்ளது.பற்றை காடு பரந்து கவனிக்கப்படாதிருந்த இந்நினைவு தூபி யாழ்ப்பாணத்தினில் இந்திய துணைதூதரகம் திறக்கப்பட்ட பின்னர் புனரமைக்கப்பட்டு ஆண்டுதோறும் இலங்கை-இந்திய இராணுவ அதிகாரிகள் பிரசன்னத்தினில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதேவேளை 1987 – 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட இந்திய இராணுவத்தினருக்காக கல்வியங்காட்டு இராச பாதையில் பிடாரித்தோட்டம் பகுதியில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த நினைவுத்தூபி 17 வருடங்களாக கவனிப்பாரற்று இருப்பதுடன், தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே இந்த தூபி உள்ளது.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழுவினர் இந்த நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்காக 17 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த குறித்த நினைவுத் தூபியை சுத்தம் செய்யும் பணியில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய ஆக்கிரமிப்பு படையினால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப்படுகொலை நினைவேந்தலை நடத்த விடாது தடுத்த யாழிலுள்ள இந்திய துணைதூதர் அழுத்தங்களை பிரயோகித்ததாக சொல்லப்படுகின்றது.அப்பகுதி பொது அமைப்புக்கள் சில இதற்கு முற்பட்ட போதும் தமது எடுபிடிகளான அரசியல் தரப்பினை சேர்ந்தவர்கள் ஊடாக அதனை துணைதூதர் நட்ராஜ் தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது.
i3i2
இதேவேளை தமிழ் மக்களிற்காக ஒன்றிணையாத வட மாகாணசபையினை சேர்ந்தவர்கள் இறைச்சித்துண்டுகளிற்காக அலையும் நாய்கள் போன்று இந்திய தூதரக நிகழ்வுகளிற்கு முண்டியடித்து பங்கெடுப்பதாக சமூக ஊடகங்களினில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்லறை தேடி அலையும் இந்திய துணைதூதர்! Reviewed by NEWMANNAR on August 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.