அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில்.....கலாபூஷணம் விருது பெற்ற செபஸ்தியான் மாசிலாமணி அவர்கள்.....


கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மைக்காண வருகின்றார் நாட்டுக்கூத்த நெறியாளர் அகிலஇலங்கை சமாதானநிதவானுமாகிய கலாபூஷணம் விருது பெற்ற செபஸ்தியான் மாசிலாமணி அவர்களின் அகத்திலிருந்து…

நாட்டுக்கூத்துக்கலைஞர்கள் மட்டுமல்ல ஏனைய கலைஞர்களும் தங்களது இறுதிக்காலத்தில் 85-90 வயதுகளில் மாரடைப்போ ஏனைய காரணங்களாளோ இறந்து விடுகின்றார்கள் அவர்களுடன் அவர்கள் வளர்த்த கலையும் இறந்து போகின்றது. அதைஅடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஆவணப்படுத்துதல் அவசியம்……

தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் முருங்கன் தற்போது ஆவணம் நானாட்டானில் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சமூகசேவையில் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன்
தங்களின் கலைப்பயணத்தின் தொடக்கம் பற்றி-
எனது கலைப்பயணம் எனும் போது எனது தந்தை மரியான் செபஸ்தியான நாட்டுக்கூத்து அண்ணாவியார் தாயும் எனது மூத்த அண்ணன் செபமாலை(குழந்தை) தம்பி மிருதங்ஙவித்துவான் இப்படியாக கலைக்குடும்பத்தைச்சார்ந்தவர்கள் ஆதலால் எனக்கு சின்ன வயது அதாவது 08வயது இருக்கும் போதே கைத்தாளம் போடுதல் நானும் எனது அண்ணணும் தந்தையுடன் செல்வோம் பரம்பரைபரம்பரையாக தொடர்கின்றது கலைப்பயணம்….

தங்களது முதல் கலைமன்றம் பற்றி---
அண்ணணும் நானும் இணைந்து இயாகப்பர் இன்னிசைக்கலாமன்றம் ஒன்றை உருவாக்கினோம் ஆனாலும் அது ஒரு குறிப்பிட்ட சாரருக்கான மன்றமாகவே மக்களால் உணரப்பட்டது அதையுணர்ந்து கொண்டு நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு மன்றமாக முருங்கன் முத்தமிழ் கலாமன்றம் என்று பெயர்மாற்றம் செய்தோம் அதன் பின்பு எல்லோரும் கூட்டாக ஒன்றிணைந்தார்கள் மிகவும் சிறப்பாக செயலாற்றினோம் எமது மன்றத்தின் முதல் நாடகம் பாட்டாளிக்கந்தன் விவசாய விழா மற்றும் கூட்டுறுவு விழாவில் இந்த நாடகத்தினை அரங்கேற்றினோம் அமோக வரவேற்பினை பெற்றது.
இப்படியாக முருங்கன் முத்தமிழ் கலாமன்றம் தொடர்ச்சியாக பிரதேசவாரியாக மாவட்ட வாரியாகவும் தேசியத்திலும் போட்டிகளில் பரிசுகளையும் கௌரவத்தினையும் பெற்றோம் வீரத்தாய்-யார்குழந்தை-கல்சுமந்த காவலர்கள் இந்த மூன்று நாடகங்களும் மாறி மாறி மேடையேற்றினோம். அப்போது கலையரசு விருது பெற்ற சொக்கலிங்கம்
; (DRO)இருந்தார்.

அப்போது இருந்த கலைமன்றங்கள் பற்றி---
  • முருங்கன் முத்தமிழ் கலாமன்றம்
  • வங்காலை வளர்கலை மன்றம்
  • வான் வழி மன்றம்
  • கலை கலாச்சார மன்றம் இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டிமிக்க மன்றங்களாக இருந்தது.இப்போதும் அப்ப்டியே....
முருங்கனில் இருந்து நானாட்டான் ஆவணம் குடியேறக்காரணம் என்ன---
எனது 1973 ஆம் ஆண்டு திருமணமாகி ஆவணம் வந்தபிறகு ஆவணம் சொந்தமாகிப்போனது
நானும் அண்ணணும் இந்தக்கிராமத்திற்கு சில நாடகங்களுக்கு நெறியாள்கை செய்துள்ளோம் அப்படியிருக்க நான் இப்போது திருமணமாகி ஆவணம் வந்த பின்பு இங்கு ஒரு மன்றத்தினை உருவாக்க எண்ணினேன் அதன் விளைவு புனித கார்மேல் அன்னை கலாமன்றம் 1973ம் கடைசியில் உருவாக்கினேன். நான் நடிப்பதை நிறுத்திக்கொண்டு நெறியாள்கையும் பின்னணி இசையும் மேக்கப்போன்ற விடையங்களை அவதானித்து வருகின்றேன்.
“கடவுள் தீர்ப்பிடுகிறார்”
“தாவீது” “யோசவஸ் நாடகம்”
“பவுல் நாட்டுக்கூத்து”

இதுபோன்ற வில்லுப்பாட்டு சமூகநாடகங்கள் விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவற்றில் அன்பு ஒற்றுமை மனிதமாண்பு போன்றவற்றினையும் கல்வெட்டுப்பாடல்கள் திருமணப்பாடல்கள் கவிப்பாமாலைகள் நாடகநெறியாள்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுவருகின்றேன்.

இந்த நாட்டுக்கூத்துக்கலையை எப்படி காத்துக்கொள்ள முனைகின்றீர்கள்------
கலைக்குடும்பம் எனும் கலையார்வம் இயல்பானதே…நல்லதொரு கேள்வி இக்கலையை எனது தலைமுறையோடு அழிந்து போகாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதென்றால் என்னிடம்.... பல்கலைக்கழக மாணவர்கள் வந்து இக்கலையினை கேட்டு அறிந்தும் ஆய்வு செய்பவர்களிடம் நான் கூறும் விடையம் எல்லோருக்கும் தெரியும்படியும் அறியவும் செய்ய வேண்டும் என்பதே ஆனால் அந்த மாணவர்களின் இலக்கு அந்தப்பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே தவிர கலை மீதான ஆர்வமும் ஈடுபாடும் இல்லை…

நான் அதிகமாக நாட்டுக்கூத்துதான் செய்துவருகின்றேன் மன்னார் நாட்டுக்கூத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான ஆவணப்படுத்தும் செயலில் உள்ளேன் மன்னாருக்கே சிறப்பான (ஒவ்வொரு கிராமத்துக்கும் உள்ளது) அந்தோனியார் வாசாப்பு 100 பேருக்கு மேல் வாசித்துள்ளார்கள் நிறைய பார்த்திருக்கின்றார்கள் புத்தகங்களாகத்தான் இருக்கின்றது. அதில் இராகம் தாளம் என்பனவை தெரியாது அதனால் டொன்பொஸ்கோ வாசாப்பு இந்தியாவில் இருந்து வருகைதந்த பாதர் அவர்களின் முயற்சியால் இறுவட்டாக வெளிவந்தது,

வடமோடி தென்மோடி இராகம் என்ன தாளம் என்ன என்பதை தெளிவுபடுத்தி இறுவட்டாக வெளியிடவேண்டும் மோகனராகம் என்றால் என்ன தாளம் என்றால் என்ன இராகம் இலகுவாக புரிந்துகொள்வதாக அமையும்.
 சந்தோமையார் வாசாப்பு உள்ள வடமோடி தென்மோடி இராகங்களை பிரித்து எழுதவேண்டும் இதுவரைகாலமும் செய்யப்படவில்லை.... நாட்டுக்கூத்துக்கலைஞர்கள் தங்களது இறுதிக்காலத்தில் 85-90 வயதகளில் மாரடைப்போ ஏனைய காரணங்களாளோ இறந்துவிடுகின்றார்கள் அவர்களுடன் அவர்கள் வளர்த்த கலையும் இறந்து போகின்றது.
அதைஅப்படியே அழிய விடாமல் காத்துக்கொள்ள எடுத்துள்ள முயற்சிதான் இந்த இறுவட்டு முயற்சி….

தங்களின்  இந்த முயற்சியினை வேறுமாவட்ட நாட்டக்கூத்துக்கலைஞர்கள் செய்துள்ளார்களா…???
யாழ்ப்பாணத்தில் நாட்டுக்கூத்துக்கலைஞர்கள்  செய்துள்ளார்கள் மன்னாரில் சநஉழனiபெ பதியும் வசதியும் இல்ல நான் கலையருவி தமிழ்நேசன் அடிகளாரின் கேட்டுள்ளேன்  மன்னாரில் உள்ள நாட்டுக்கூத்துக்கலைஞர்களையும் ஒன்றிணைத்து தரமான தகுதியான இராகங்களை தாளங்களை வடமோடி தென்மோடி பதிவு செய்ய இருக்கின்றோம். இறுவட்டாக

சினிமாப்பாடல்களுக்கும் நாட்டுக்கூத்துப்பாடல்களுக்கும் இடையில் வேறுபாடு---
கிராமியப்பாடல்களில் இருந்துதான் சினிமாப்பாடல் உருவெடுத்துள்ளது ஆனால் சினிமாப்பாடல் தற்போது எல்லோரையும் தனதாக்கியுள்ளது. எல்லா சினிமாப்பாடல்களையும் எல்லோரும் விரும்பிக்கேட்கின்றார்கள் என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கிராமிய நாட்டுக்கூத்துப்பாடல்களை திருமணச்சடங்கு பிறந்தநாள் இன்னும் விழாக்கள் போன்றவற்றின்போது நாட்டுக்கூத்துப்பாடல்களை ஒளிக்கவிடலாம் அந்த முயற்சியில் தான் இறுவட்டாக கொண்டு வந்தால் இலகுவான முறையில் எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கலாம் இரசனைமிகுந்ததாக இருக்கும்.
 தமிழர்களைத்தவிர ஏனையவர்கள் என்ன விழாக்கள் கொண்டாட்டங்கள் என்றாலும் தங்களது பாரம்பரிய கலை கiலாச்சாராத்தினைத்தான் பின்பற்றுவார்கள் சிங்களவர்கள் தங்களது நடனத்தினையும் வெள்ளளைக்கார் தமது இசையினையும் ஆனால் தமிழர் மட்டும் தான் அந்நிய இசையினையும் கலையினையும் தமது கலைகளாக பாவிக்கின்றனர் ஏற்றுக்கொள்ளுகின்றனர் தங்களது சொந்தக்கலையினை மறந்து.

கடந்த மாதம் மன்னாருக்கு வருகை தந்த கல்வியமைச்சர் வரவேற்க மன்னார் பாரம்பரியக்கலை இன்னிசையுடன் வரவேற்றபோது வாயடைத்துப்போய் நின்றார் இன்னும் மன்னாரில் இக்கலை சிறப்பாக இயங்குகின்றதா…பாரம்பரியக்கலையை கூட்டவோ குறைக்கவோ முடியாது அது அதன் தோற்றத்தின் போது வந்த சிறப்பு அது அப்படியே தான் இருக்கும்.

நாட்டுக்கூத்து நாடகம் குறியீட்டு நாடகம் சரித்திர நாடகம்    மூன்றுக்குமான வேறுபாடு என்ன----
சாராயத்தினை ஒழிப்போம் என்னும் தொணிப்பொருளில் குறியீட்டு நாடகத்தில் பெரிய சாராயப்போத்தலை காட்சிப்படுத்தி சாராயத்தினை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டே குறியீடு ஆக உள்ள சாராயப்போத்தலினை ஒழித்துவிடுவார்கள்.

அதே போன்று நாட்டுக்கூத்து நாடகத்தில் சாராயத்தினை ஒழிப்போம்.... சாராயத்தினை ஒழிப்போம்.... என்று பாடிக்கொண்டே கருத்துச்சொல்வது தான் இவை இரண்டிலும் நாட்டுக்கூத்தானது இரசிப்புத்தன்மை இருக்கும் இலகுவில் மறந்துவிடுவார்கள்  குறியீட்டு நாடகத்தில் வரும் குறியீட்டுப்பொருள் மக்கள் மனதில் நிலையாய் பதிந்து விடுகின்றது.

மறக்க முடிவதில்லை தற்போதைய சூழலில் குறியீட்டு நாடகப்பாணிதான் தேவையாகவுள்ளது. நாட்டுக்கூத்து நாடகம் எனும் போது ஒருவரின் சரிதையோ அல்லது புனிதரின் சரிதையோ குறியீட்டு நாடகத்தில் காட்டிவிட முடியாது. அப்படிக்காட்டினாலும் புரியாது அவர் என்ன மாதிரி இருந்தாரோ அப்படியே தான் காட்டவேண்டும் முந்திய வாள் சண்டையில் காட்டுவார்கள் தற்போது இசையுடன் அசைவுகள் இணைந்துள்ளது இதை அப்படிப்பார்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
குறியீட்டு நாடகத்தின் மூலம் தான்  தற்போதைய சமூகத்தினை விழிப்புணர்வடையச்செய்யலாம் தெருக்கூத்து நாடகங்களிலும் இதே முறைதான் உள்ளது.
சரித்திர நாடகங்கள் என்றால் அங்கு கற்பனை இல்லை கலப்புக்கள் இல்லை உண்மையான வாழ்க்கை வரலாற்றினை கூறுவதுதான் முக்கியம் வரலாற்று நாடகங்கள் கம்பராமாயாணம்-பாஞ்சாலிசபதம்-வாலி வதை-நளதமயந்தி சுந்தரகாண்டம் போன்றவற்றனை குறிப்பிடலாம்.

தற்கால இளைஞர்கள் யுவதிகளுக்கு தங்களின் ஆலோசனை----
நான் கலைக்குடும்பத்தினைச்சார்ந்தவன்  கொஞ்சம் சங்கீதம் படித்தவன் சங்கீதம் படித்தவன் வாழ்வு சந்தோஷமாகத்தான் இருக்கும் என்பார்கள் நான் சந்தோஷமாகத்தான் இருக்கின்றேன். மற்றவர்களையும் சந்தோஷமாகத்தான் இருக்கவைப்போம். பிறரின் மகிழ்ச்சியில் தான் எனது மகிழ்ச்சி உள்ளது. பெரியவர்களை மதிக்கவேண்டும் திறமையினை மனம்விட்டுப்பாராட்ட வேண்டும்.எமது கலை கலாச்சாரத்தினை என்றும் கட்டிக்காக்கவேண்டும்

மன்னாரில் கலைஞர்களுக்கு ஆதரவு குறைவு ஊக்குவிப்பு இல்லை என்பது பற்றி---

உண்மைதான் ஏனோ தெரியவில்லை........ யாழ்ப்பாணத்தினைப்பொருத்தவரையில் 08 வயதிலே மிருதங்க மற்றும் நாட்டிய அரங்கேற்றம் எல்லாம் செய்கின்றார்கள் மன்னாரைப்பொறுத்தவரையில்  அப்படியில்லை தகுதியும் திறமையும் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் வரவேற்கமாட்டார்கள் மூத்தகலைஞர்களை மதிக்கும் தன்மையும் கௌரவிக்கும் செயற்பாடும் அருகிவருகின்றது. இல்லை..ஏனோ தெரியவில்லை…

கலைப்பணி ஆற்றிய மன்றங்கள் பற்றி---
  • முருங்கன் முத்தமிழ் கலாமன்றம்
  • ஆவணம் கார்மேல் அன்னை கலாமன்றம்
  • ன்னார் திருமறைக்கலாமன்றம்
  • நானாட்டான் பங்கு பாடகர்குழாம்
  • ன்னார் தமிழ்ச்சங்கம்
  • ஆவணம் கார்மேல் அன்னை ஆலய பாடகர்குழாம்
  • முருங்கன் புனித இயாகப்பர் ஆலய சபை

பாடல்கள் பதிவுசெய்து வெளியிட்ட ஒளிப்பேழைகள் ஒலிப்பேழைகள் பற்றி---
  • நாட்டார் பாடல்கள்-கலைபண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் திருகோணமலையில் வெளியிடப்பட்டது.
  • தவக்கால பாரம்பரியப்பாடல்கள்-அருட்பணி அன்புராசா அவர்களால் நெறிப்படுத்தி வெளியிடப்பட்டது.
  • தவக்காலப்பண்கள்-அருட்பணி அன்புராசா அவர்களால் நெறிப்படுத்தி வெளியிடப்பட்டது.
  • யார்குழந்தை நாட்டுக்கூத்து மன்னார் திருமறைக்கலாமன்ற நடிகராக நெறியாளராக 22-02-2009 பேராதனைப்பல்கலைக்கழக நாடகவிழாவிலும் 08-10-2009 வடமாகாண இலக்கிய விழா யாழ்ப்பாணத்திலும மன்னார் மறைபரப்பு கலைவிழா 11.10.2009 நகர சபைமண்டபத்திலும் ஆவணப்படுத்துவதற்காக அரங்கேற்றப்பட்டது.

நீங்கள் நடிகனாக பங்கேற்ற நாடகங்களும் நாட்டுக்கூத்துகளும் பற்றி---(1960-2017)

  • பாட்டாளிக்கந்தன்
  • நல்வாழ்வு நாடகம்
  • வெனிஸ் வர்த்தகன்
  • வீரத்தாய்
  • புதுமைப்பெண்
  • கல்சுமந்த காவலர்கள்
  • யார் குழந்தை
  • அன்புப்பரிசு
  • திருப்பாடுகளின் காட்சி
  • சந்தியோகுமையோர் நாடகம்
  • சாம்ராட் அசோகன்
  • சில்வேஸ்த்திரியார் நாட்டுக்கூத்து
  • கனவு கண்ட கதாநாயகன்

 தங்களின் வரிகளிலும் அரங்கேற்றிய வில்லுப்பாட்டுக்கள் பற்றி---(1968-2017)
  • அன்பே கடவுள்
  • நினைவு விழா
  • செபவாழ்வு
  • கால்நடைச்சேவைகள்-2
  • கிராமிய விழிப்பூட்டல்
  • செபஸ்ரியான் குரூஸ் பிரியா விடை
  • அருட்பணி. மரியசேவியர் அடிகளின் 45ம் ஆண்டு நிறைவு விழாநாமும் உயிர்த்தெழுவோம்
  • இறைவார்த்தை
  • துமிழ்தாய் வாழ்த்து
  • விசுவாச வாழ்வு
  • அருட்சகோதரி மரிய ஜீவந்தி
  • பெண்கள் கல்வி
  • சமூகமே விழித்தெழு
  • தங்களின் கலைப்படைப்புக்கள் பற்றி---
  • கடவுள் தீர்ப்பிடுகின்றார்-நாட்டுக்கூத்து
  • ஞானசவுந்தரிநாட்டுக்கூத்து
  • புனித யோசவாஸ் நாட்டுக்கூத்து
  • மனுநீதி கண்ட சோழன்-நாட்டுக்கூத்து
  • நல்லதங்காள் இசைநாடகம்
  • மனமாற்றம்- நவினநாடகம்
  • ஞானசவுந்தரி-இசைநாடகம்
  • தாவீதின் வெற்றி-நாட்டுக்கூத்து
  • சிங்காரபுரி ஆட்சி-நாட்டுக்கூத்து
  • பாஞ்சாலி சபதம் நாட்டுக்கூத்து
  • கொடைவள்ளல் பாரி –நாட்டுக்கூத்து-2016(இன்னும் உள்ளது கைவசம் இல்லை)

தங்களின் பரிசு பெற்ற கவிதைகள் பற்றி---
  • “கோழியின் மகிமை”-சிறந்த பரிசு-இந்தியன் போல் றிபாம் பெங்களுர்-இந்தியா-25-07-1996
  • “வந்துவிடும் சமாதானம்” 2ம் பரிசு கலாச்சார அலுவல்கள் தேசியமரபுரிமைகள் அமைச்சு கொழும்பு-27-06-2005
  • “மனங்களை மாற்றிடுவோம”;-சிறந்த கவிதைக்கான பரிசு-17-09-2006
  • “நல்ல தர்மத்தை வளர்ப்போம்”-2ம் பரிசு தேசிய கலை இலக்கியப்பெருவிழா மன்னார் 05-11-2007
  • “நீதியே விழித்தெழு”-1ம் பரிசு நதி சஞ்சிகை நடத்திய கவிதைப்போட்டி-13-01-2008
தங்களினால் ஆற்றப்படுகின்ற சமூக ஆன்மீகப்பணிகள் பற்றி----

  • 37வருடங்கள் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் விசேடதரத்தில் ஓய்வு பெற்றமை.
  • 28-02-2002ல் இருந்து அகில இலங்கை சமாதானநீதவனாகவும்.
  • மன்னார் மாவட்ட ஆதாரவைத்தியசாலை அபிவிரத்திக்குழுவின் நிர்வாக உறுப்பினராக உள்ளேன்.
  • நானாட்டான் பகுதி நெல்உற்பத்தி சங்கங்களின் சமாசக்கணக்காய்வார்
  • நானாட்டான் பங்கு ஆலயமேய்ப்புபணிச்சபையின் பொருளாளராக உள்ளேன்.
  • ஆவணம் சிக்கன சேமிப்பு கூட்டுறவுச்சங்க தலைவராகவுள்ளேன்.
  • ஆவணம் நெல் உற்பத்தியாளர் குழுத் தலைவராக உள்ளேன்
  • ஆவணம் புனித கார்மேல் சேவாசங்கா பொருளாளராகவும் பங்கு ஆலயமேய்ப்புபணிச்சபையின் உபசெயலாளராகவும் உள்ளேன்.
  • வஞ்சியன் குளம் கிராமசேவகர் பிரிவு விழிப்புணர்வு குழு உறுப்பினராகவும் நானாட்டான் பங்கு பாடகர் குழு உறுப்பினராகவும் உள்ளேன்.
  • நானாட்டான் பங்கு ஆரோக்கிய அன்னை ஆலய சங்கீர்த்தமாக தொடர்ந்து 20வருடங்களுக்கு மேலாக ஆலயப்பணி செய்து வருகின்றமை.
  • நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்தர்குழுவில் அங்கத்தவராகவுள்ளேன்.
  • இத்தோடு கோவில்திருவிழாக்கள் பாடல்கள் எழுதுவதும் பாடல்பழக்குவதும் நாட்டுக்கூத்துக்களை நெறியாள்கை செய்வது போன்ற பணிகளுடன் எண்ணற்ற வாழ்த்துப்பாக்கள் கவிபுணைவுகள் இரங்கல்கள் என்று எழுதிக்கொடுத்தும் வருகின்றேன்.

தங்களின் கலைச்சேவைக்கும் ஆன்மீகச்சேவைக்கும் பாராட்டி வழங்கப்பட்ட பட்டங்களும் விருதுகளும் பற்றி---
  • வடக்கு மாகாண தமிழ்இலக்கிய விழாவில்-03-02-2002 நாட்டார்பாடல் கலைஞர் விருதும் பொனனாடைபோர்த்தி கௌரவிப்பு.
  • இந்தியா திருச்சியில் வரீமகரஜோதி இசைநாட்டியப்பள்ளியால் வாழ்நாள் சாதனையாளர் விருது-09-10-2008
  • இந்தியா திருச்சிராப்பள்ளி இசைச்சங்கம் 19-10-2008 தமிழிசை விழாவில் ஈழத்துநாட்டார்பாடல்களை இசைத்தமைக்காக ஈழத்துப்பாடகர் பாராட்டுச்சான்றிதழ் வழங்கியது.
  • இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 15-02-2009 40வருட கலைச்சேவையைப்பாராட்டி கலாபூஷணம் விருது பெற்றுக்கொண்டேன்.
  • கலைவழி இறைப்பணி ஆற்றியமைக்காக இறைக்கலைவேந்தர் விருது மன்னார் மறைமாவட்ட சமூகஅருட்பணி மையத்தினால் வழங்கப்பட்டது.
  • வடமாகாண இலக்கியவிழாவில்  ஆளுநர்விருது 15-10-2011
  • மன்னார் செம்மொழி விழாவில் கொளரவவிருது-25-10-2010
  • கௌரவ விருது பொன்னாடையும் -04-09-2012
  • மன்னார்  இளைஞர் மறைமாவட்ட ஒன்றியம் அரங்கவித்தகர் 22-09-2013
  • செபஸ்தியார் 60 யூபிலி விழாவில் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கியமை.
இவற்றோடு இன்னும் ஏராளமான பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னங்கள் பாராட்டுசான்றிதழ்கள் தந்துள்ளார்கள் மேலே உள்ளவை என்நினைவில் நின்றவையும் நான் குறித்து வைத்தவையும்.

மன்னார் மக்களின் கலைஞர்களின் திறமைகளையும் அற்றலையும் வெளிக்கொணரும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து---

மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் எல்லா வகையான வளமும் திறமைமிகுந்த கலைஞர்களும் இருக்கின்றார்கள் அவர்களின் திறமைகள் அவரவர் கிராமங்களோடு நின்றுவிடுகின்றது. வெளியில் தெரிவதும் இல்லை அவர்களுக்கான ஊக்குவிப்பும் மிகவும் குறைவுதான் அந்தக்குறையை நிவர்த்தி செய்யவே தங்களது நியூமன்னார் இணையம் தோன்றியுள்ளதாக நான் எண்ணுகின்றேன்.
 உண்மையில் தங்களின் சேவை அளப்பரியது தொரட்டும் எமது மன்னார் மாவட்டத்தின் பெருமையும் கலைஞர்களின் திறமையும் வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டும் வை.கஜேந்திரனாகிய உங்களையும் நியூமன்னார் இணையத்தின் நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறிமகிழ்கின்றேன்…

சந்திப்பு-வை-கஜேந்திரன்- 

























கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில்.....கலாபூஷணம் விருது பெற்ற செபஸ்தியான் மாசிலாமணி அவர்கள்..... Reviewed by Author on August 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.