அண்மைய செய்திகள்

recent
-

சம உரிமை, சுயமரியாதை பெறுவதற்கான தமிழர் போராட்டங்களுக்கு இந்தியா துணை நிற்கும் -இந்திய சுதந்திரதின நிகழ்வில் விக்னேஸ்வரன் நம்பிக்கை உரை-


நாம் வாழுகின்ற தாயகப் பிரதேசத்தில் சம உரிமை; சுயமரியாதை பெறுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்ற தமிழர்களின் போராட் டங்களுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என தனது வலுவான நம்பிக்கையை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 70ஆவது சுதந்திர தின த்தை ஒட்டிய யாழ் நிகழ்வுகள் யாழ்.கிறீன் கிறாஸ் விடுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில் அதிதியாகப் பங்கேற்றிருந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தனது உரையை ஆற்றுகையில்,
குரு ப்ரம்மா...
வட இலங்கையின் மாண்புமிகு இந்திய நாட்டு துணைத்தூதுவர் திரு.நடராஜன் அவர்களே! திருமதி சாந்தி நடராஜன் அவர்களே! இங்கு வருகை தந்திருக்கும் கெளரவ அதிதிகளே! சிறப்பு அதிதிகளே! எனதருமைச் சகோதர சகோதரிகளே!

பாரதநாடு சுதந்திரம் பெற்று தனது 70வது சுதந்திர தின  நிகழ்வுகளை இந்தியா வின் பல பாகங்களிலும் வெகுவிமர்சையாக இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

இவ் வேளையில் எமது இந்திய துணைத் தூதுவர் திரு.நடராஜன் அவர்கள் வடமாகா ணத்தில் தமது பங்கிற்கு சுதந்திர தின நிகழ்வு களை இன்று (நேற்று) யாழ்.கிறீன் கிறாஸ் விடுதியில் முன்னெடுத்திருக்கும் சந்தர்ப்பத் தில் இந்திய மக்களையும் குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றேன்.

விஜயநகரப் பேரரசு காலத்தில் கடல் வழியாக இந்தியாவிற்கு முதன்முதல் வருகை தந்த வஸ்கோடகாமா என்ற போர்த் துக்கீசர் இந்தியாவுக்கான கடல்வழிப் பாதை யைக் கண்டுபிடித்தார்.
அக்கால இந்தியாவின் மன்னர்கள் ஆட்சியின் கீழ் காணப்பட்ட செல்வச் செழிப் பையும் குறிப்பாக வைரங்கள், வைடூரியங் கள், இரத்தினங்கள், மணிவகைகள், வாச னைத்திரவியங்கள் போன்றவற்றையும் கண் ணுற்ற மேலை நாட்டவர்கள் இந்தியாவை ஆச்சரியமாகப் பார்த்தனர். அப்பொருட் களை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வணிக நோக்கு டன் 1498ல் வந்திறங்கினார்கள். போர்த்துக் கீசர்கள் காலத்தில் அவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் வரத் தொடங்கினர்.

ஆட்சியையும் பல இடங்களையும் அவர் கள் கைப்பற்றினர். 1947ஆம் ஆண்டு  வரை தமது ஆட்சி அதிகாரத்தை இந்தியா வில் அவர்கள் நீடித்தனர்.
அந்த அந்நியரின் ஆட்சிக்கெதிராக தேச பிதா மகாத்மா காந்தி அவர்கள் அகிம்சை வழியிலான மக்கள் போராட்டங்களை முன் னெடுத்தார்.

சூரியனே அஸ்தமனமடையாத சாம்ராஜ்ஜி யத்தைக் கொண்ட ஆங்கிலேயர்களின் ஆட்சி 1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முடிவுக்கு வந்தது.

அந்த  நாளே இந்தியாவின் உதய நாளாக அதாவது சுதந்திரம் பெற்ற தினமாக நினைவுகூரப்படுகின்றது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டமானது இந்தப் பகுதியில் உள்ள மற்றைய நாடுகளுக் கும் சுதந்திரம் கிடைக்க வழிசமைத்தது.

இந்தியாவின் சுதந்திரத்தை தொடர்ந்து 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தது. ஆனால் ஒரு சில வருடங்களுக்கு உள் ளேயே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக் கும் இடையே தோன்றிய கருத்து வேறுபாடு, முரண்பாடுகள், மோதல்கள் இன்னும் தொடர் ந்த வண்ணமே உள்ளன.
பெரும்பான்மையினர் என்ற உரித்தை ஆங்கிலேயர் காலத்தில் பெற்றவர்கள் தமது ஆட்சி உரித்துக்கு மற்றைய இனத்தவர் அனைவரும் அடிபணிய வேண்டும் என்ற அவர்களின் எண்ணமே இம்முரண்பாடு களுக்கும் மோதல்களுக்கும் காரணமாக இருந்து வந்துள்ளது.

காலத்துக்கு காலம் அம்மோதல்கள் தணிந்திருக்கின்ற நிலை வந்த போதும் அதன் பாதிப்புக்களை முழுமையாக உணர்பவர்கள் அல்லது அனுபவிப்பவர்கள் தமிழ் மக்களா கவே இருந்து வருகின்றனர்.
இந்திய நாட்டின் தலையீட்டின் கீழ் உரு வாக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கான கூடுதல் அதிகாரங்களை வழங்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட போதும் சிங்கள மக்களை சமாதானம் செய்யும் நோக்கில் மாகாண சபை அரசியல் அமைப்பு முறையானது அனைத்து மாகாணங்களுக் கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதனால் எமக்கெனத் தரப்பட வேண்டிய உரிமைகள், உரித்துக்கள் மறைக்கப்பட்டு விட்டன. இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் தம் மைத் தாமே ஆளக்கூடிய அதிகாரங்களுடன் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகிய வற்றைப் பகிர்ந்து தருமாறு அழுத்தங்கள் பிரயோகித்த போதும் ஆளுநர் என்ற ஒரு அலுவலரை தலைமை அலுவலராக நியமி த்து சகல நடவடிக்கைகளையும் கட்டுப்படுத் தக் கூடிய மேலதிக அதிகாரங்களை அவரு க்கு வழங்கி அவரின் நெறிப்படுத்தலின் கீழ் எம்மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக வாழ வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய மகிந்த ராஜபக்­ ஆட்சிக் காலத்தில் போரின் முடிவுக்குப் பின்னர் ஒரு தமிழ் மகனை வட மாகாண ஆளுநராக்க வேண்டும் என்று பல நிறுவனங்களாலும் அமைப்புக்களாலும் கோரிக்கை விடப்பட்டது.

அதனை அவ் ஆட்சியாளர்கள் நிராகரித் தார்கள். தெற்கத்தேய மாகாணங்களுக்கு ஒரு தமிழரை நியமிக்கலாம் ஆனால் வட மாகாணத்துக்கு நியமிக்கக் கூடாது என்ற கெட்டியான திர்மானம் ஒன்று அவர்களால் எடுக்கப்பட்டது. அந்தத் தீர்மானமே இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பல் வேறு சிற்றரசுகளாகச் சிதறிக்கிடந்த இந்தியா சுதந்திரத்தின் பின் இரும்பு மனிதர் வல்ல வாய்பட்டேலின் ஆளுமையின் காரணமாக பாரத நாடாக ஒன்றிணைக்கப்பட்டது.
பல்வேறு மொழிகளையும் கலாசாரங்க ளையும் கொண்ட வேறுபட்ட சமூகங்கள் இந்தியர் என்ற ஒரு பொது அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்தார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நோக்கில் மொழி வழி மாநிலங்களை அமைத்து பலமான கூட்டு அரசாங்கத்தினை அமுல்படுத்தினார்கள்.

டாக்டர் அம்பேத்கரின் தலைமையில் புதிய குடியரசு அரசியல் அமைப்பை வரை ந்து சமூக பொருளாதார அரசியல் சமத்து வத்துக்கு வித்திடப்பட்டது.
பாரதநாடு என்ற வறுமையான தேசத்தை பசுமைப் புரட்சி மூலம் உணவில் தன்னி றைவு காண வைத்தார்கள் எம் இந்திய சகோ தர சகோதரிகள். கல்வியில் வளர்ச்சி, வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடக்கூடிய வகையில் விண்வெளி ஆராய்ச்சிகள், வல்லரசுகளுக்கு சவாலாக அணு ஆராய்ச்சி, ஏவுகணைப் பரி சோதனைகள் என்று பிரமிக்கத்தக்க வளர்ச் சியை இந்தியா கண்டு வருகின்றது. பெரும் பான்மையினரின் மொழிமூல, மதமூல ஆக்கிரமிப்பை சிலர் வெளிக்காட்ட முனைந் தாலும் இதுவரையில் உலகியல் சார்ந்த சம யச் சார்பற்ற அதிகார ஆட்சியே நிலைத்துள் ளது. ஆங்கில மொழி அனைத்து மாநிலங் களையும் ஒன்றிணைத்துள்ளது.

எமது அண்டை நாடாகிய இந்தியா வளர்ச்சி பெற்றிருப்பதைக் கண்டு நாங்க ளும் புளகாங்கிதம் அடைகின்றோம். எமது மக்கள் பேரினவாதத்தால் துரத்தியடிக்கப்பட்ட போது எமது மக்களுக்கு அடைக்கலம் கொடு த்து எமது தலைவர்களை அங்கீகரித்து நாம் இந்த நாட்டிலே சமமான பிரஜைகளாக வாழ வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வந்த இந்திய அரசுகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக் கின்றோம்.

இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாங்கள் சம உரிமை உடையவர்களாக எமது தாயகப் பிரதேசத்தில் எமது விடயங்களை நாங்களே  கையாளக்கூடியவர்களாக சுயமரியாதை யுடன் வாழ்வதற்கு தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த போராட்டத்திற்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என்ற வலுவான நம்பிக்கை எமக்குண்டு உண்மையில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் கொண்டு வந்த போது பாரதத் தின் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து உரித்துக்களையும் வடகிழக்கு மாகாணங்கள் பெறவேண்டும் என்ற எண் ணத்துடன்தான் 1987ஆம் ஆண்டில் கருத் தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தெற்கு அரசியல்வாதிகளின் பேரினவாதம் அதற்குத் தடையாக நின்றது. இன்றும் நிற்கின்றது. இந்நாடு ஒரு இன மக்களுக்கே உரியது. மற்றைய இனங்கள் அந்தப் பெரும்பான்மை இனத்தவர்களை சுற்றிப் பயணிக்கின்ற கொடிகளாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரையில் முரண்பாடுகள் வளர்ந்து கொண் டேயிருக்கும்.

உங்களுடைய சுதந்திரத்தை எங்களது சுதந்திரமாக நாங்கள் கொண்டாடியதுண்டு. பாரதியின் சுதந்திரப் பாடல்களைப் பாடிய ஞாபகங்கள் மனத்திரையில் வித்திட்டு நிற் கின்றன.
தந்தை மகாத்மா காந்தி கொலை செய் யப்பட்ட போது எமது உறவினர் ஒருவரை இழந்தது போன்று நாங்கள் துயருற்றோம். ஓரிரு நாட்கள் சாப்பிட மறுத்தது ஞாபகம் வருகின்றது.

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அநுராதபுரத்தில் தந்தை யாரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ரேடியோ அண்டையில் இருந்து தேம்பித் தேம்பி அழுதது ஞாபகம் வருகின்றது. வெட் கத்தை விட்டு எனது பெற்றோர்களும் சேர்  ந்து அழுதது ஞாபகம் வருகின்றது. அந்த ளவுக்கு காந்திஜி மீது எமக்குப் பற்றிருந்தது, பாரத மக்கள் மீது பாசம் இருந்தது.
வெள்ளையர் எம்மை விட்டுச் சென்ற போது இலங்கை இந்திய மக்கள் யாவருமே ஒரு தாய் மக்களாகவே எம்மை எண்ணிக் கொண்டோம்.

எம் அனைவருக்கும் காந்திஜி தந்தை யாராகக் காட்சி அளித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒற்றுமையின் சின்னமாக காந்திஜி விளங்கினார்.
ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு முன்னேற லாம் என்ற எண்ணம் இந்தியாவிலும் இலங் கையிலும் அப்போது இருந்தது.

ஆனால் அரசியல் எம்மை ஆழ்கடலுக் குள் அமுக்கி விட்டுள்ளது. இந்தியா சுதாகரித் துக் கொண்டு முன்னேறுகின்றது.

நாங்களோ எதிர்பார்ப்புக்களில் காலம் கடத்தி வருகின்றோம். இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு எம்மையும் பீடிக்க வேண்டும் அப்பொழுது தான் எமக்கு விமோசனம் உண்டு.
120 கோடி சனத்தொகையைக் கொண்ட வல்லரசாக வளர்ந்து வருகின்ற இந்தியா பல்லாயிரம் சுதந்திர தினங்களைக் கொண் டாட வேண்டும் என வாழ்த்தி எனது உரை யை நிறைவு செய்கிறேன் என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.       
 
சம உரிமை, சுயமரியாதை பெறுவதற்கான தமிழர் போராட்டங்களுக்கு இந்தியா துணை நிற்கும் -இந்திய சுதந்திரதின நிகழ்வில் விக்னேஸ்வரன் நம்பிக்கை உரை- Reviewed by Author on August 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.