அண்மைய செய்திகள்

recent
-

பறப்பாங்கண்டலில் 21 வருடங்களின் பின்னர் அரங்கேற்றப்பட்டுள்ள 'சந்திரகாசன்' நாடகம்-படங்கள்

முருங்கன் சுண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த புலவர் அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல்   எழுதி வடிவமைத்த 'சந்திரகாசன்'  நாடக அரங்கேற்றம்   21 வருடங்களின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) இரவு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பறப்பாங்கண்டல் பரலோக மாதா ஆலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) இரவு 7 மணிக்கு அரங்கேற்றப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் நாளை 19 ஆம் திகதி செய்வாய்க்கிழமை ஆகிய தினங்களிலும் இரவு 7 மணிக்கு இடம் பெறும்.

-ஆரம்ப நிகழ்வான நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்கப்பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநதன்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,வடமாகாணசபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 21 வருடங்களின் பின் 29 கிராம மக்களின் பூரண ஒத்துழைப்போதும், ஆலய நிர்வாக சபையின் ஒத்துழைப்போடும் குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.இதன் போது அருட்தந்தையர்கள்,கிராம மக்கள் என ஆயிரக்கணக்காணவர்கள் குறித்த நாடக அரங்கேற்றத்தின் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 






























பறப்பாங்கண்டலில் 21 வருடங்களின் பின்னர் அரங்கேற்றப்பட்டுள்ள 'சந்திரகாசன்' நாடகம்-படங்கள் Reviewed by Author on September 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.