அண்மைய செய்திகள்

recent
-

மேற்காசிய அளவிலான செஸ் போட்டி: 2 வெண்கல பதக்கம் வென்று மும்பை மாணவன் சாதனை....


இலங்கையில் நடைபெற்ற மேற்காசிய அளவிலான செஸ் போட்டியில் மும்பையைச் சேர்ந்த ரிஷப் ஷா என்ற 14-வயது சிறுவன் 2 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளான்.

இலங்கையில் உள்ள வாஸ்கடுவாவில் 2-வது மேற்காசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த ரிஷப் ஷா என்ற 14-வயது சிறுவன் 2 பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளான்.

14-வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு மற்றும் பிளிட்ஸ் முறை ஆகிய இரண்டு பிரிவிலும் பதக்கம் வென்றுள்ளான். 14-வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5 புள்ளிகளும், பிளிட்ஸ் முறையில் 4.5 புள்ளிகளும் பெற்று மூன்றாம் இடத்தை கைப்பற்றினான்.

இலங்கையைச் சேர்ந்த ஜி.எம்.எச். திலகரத்னே 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமத் பகத் ரகுமான் 5.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

பிளிட்ஸ் முறையில் முகமத் பகத் ரகுமான் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், திலகரத்னே 5.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.

மேற்காசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மும்பையைச் சேர்ந்த ரிஷப் ஷா நாட்டிற்காக பதக்கங்களை பெறுவது பெருமை அளிக்கிறது. மேலும், உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெறுவதே தனது நோக்கம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



மேற்காசிய அளவிலான செஸ் போட்டி: 2 வெண்கல பதக்கம் வென்று மும்பை மாணவன் சாதனை.... Reviewed by Author on September 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.