அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் லைகா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீட்டிலினுள் அல்லலுரும் மக்கள்


வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னஅடம்பன் இராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு கடந்த (10-04-2017) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் அமைக்கப்பட்ட 150 வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தார்.

சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் அமைக்கப்பட்டு லைக்கா ஞானம் கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் வவுனியா பூந்தோட்டம் நலம்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர். அதன் பின்னர் கடந்த 2017.06.12 அன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகன புஸ்பகுமார அவர்களின் வேண்டுகோளிக்கினங்க சின்ன அடம்பன் இராசபுரத்திலும் புளியங்குளம் பரிசங்குளத்திலும் மீள்குடியேற்றப்பட்டனர்.

புளியங்குளம் பரிசங்குளத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு  மூன்று மாதங்கள் ஆன போதிலும் இது வரை 48குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக லைக்கா ஞானம் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கியேறியப்பட்டுள்ளதுடன் வீடுகளும் பகுதியளில் சேதமாகியுள்ளது.

கிராமத்தினை சூழ காடுகள் காணப்படுவதனால் யானை அச்சத்தில் தினசரி தங்களது வாழ்க்கையினை கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

மற்றும் அங்கு வசிக்கும் 82குடும்பங்களுக்கு நாளுக்கு 15000லீட்டர் தண்ணீர் மட்டுமே தண்ணீர் பவுசர் மூலம் விநோகிக்கப்படுவதனால் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகின்றது. பல உதவிகள் பெற்றுத்தருவதாக அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்த போதும் இதுவரை தமக்குறிய எவ்வித வசதிகளும் பெற்றுத்தரவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் லைகா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீட்டிலினுள் அல்லலுரும் மக்கள் Reviewed by Author on September 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.