அண்மைய செய்திகள்

recent
-

உயிரைக் குடிக்கும் புளு வேல் கேம்: விளையாட்டைப் பற்றி தெரியுமா?...பெற்றோர்களின் கவனத்திற்கு....


தற்கொலைக்கு தூண்டும் புளு வேல் விளையாட்டினால் (Blue Whale Game) உலகளாவிய ரீதியில் 130 இற்கும் மேற்பட்டவர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர்.

50 டாஸ்குகளை கொண்ட இந்த விளையாட்டின் மோகத்திற்கு அதிகளவில் சிறுவர்களே ஆட்படுகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த விளையாட்டு வேகமாக பரவி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விக்கிபீடியாவில் இருந்து.......

நீலத் திமிங்கில விளையாட்டு (Blue Whale Game, (உருசியம்Синий кит, Siniy kit) "புளூவேல் சேலஞ்" என்றும் அழைக்கப்படுவது, பல நாடுகளிலும் இருப்பதாக சொல்லப்படுவது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டுக் காலமான 50 நாட்களில் விளையாடுபவர்கள் நிர்வாகிகளால் ஒதுக்கப்படும் பணிகளை தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பதாகும். "புளூவேல்" என்ற சொல், கரைக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளும் கடற் திமிங்கலங்களின் நிகழ்வுகளிலிருந்து வந்தது. இதுவரை உலகம் முழுவதும் இந்த விளையாட்டு சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

நீலத்திமிங்கில விளையாட்டு 2013 இல் உருசியாவில் VKontakte சமூக வலைதளத்தின் "இறப்புக் குழு" என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களில் ஒன்றான "F57" உடன் தொடங்கியது,இந்த விளையாட்டால் 2015 இல் முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உளவியல் மாணவரான பிலிப் புடகின் என்பவர் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். இதுபற்றி புடகின் எந்த மதிப்பம் இல்லாமல் இருப்பவர்களை தற்கொலை செய்யவைத்து அதன் மூலம் சமூகத்தை "சுத்தம்" செய்வதாக கூறினார்.

2016 ஆம் ஆண்டில் உருசியாவில் நீல திமிங்கல விளையாட்டானது, ஒரு பத்திரிகையாளர் எழுதிய ஒரு கட்டுரையால் இளைஞர்களிடையே பரவலாக பிரபலமானது, இதைத் தொடர்புபடுத்தி பல தற்செயலான தற்கொலைகளை நீலத் திமிங்கிலத்துடன் தொடர்புபடுத்தப்பட்டன. இதனால் உருசியாவில் இது பீதியை ஏற்படுத்தியது.[13] பின்னர், புடகின் கைது செய்யப்பட்டார். அவர் மீது "குறைந்தது 16 இளம் பெண்களைத் தற்கொலை செய்ய தூண்டியதாக" குற்றம் சாட்டப்பட்டது, இது உருசியாவில் தற்கொலைத் தடுப்பு சட்டம் ஏற்பட வழிவகுத்தது. மேலும் நீலத் திமிங்கல நிகழ்வு குறித்த உலக அளவிலான கவலைகளை ஏற்படுத்தியது. இது சீனாவில் "மனித எம்பிராய்டரி" போன்று அதிகரித்துவரும் சுய-தீங்கு போக்குகளுடன் இணைத்து நோக்கப்படுகிறது.

"விளையாட்டு" அமைப்பு

இந்த விளையாட்டு ஆட்டக்காரர் (வீரர்கள் அல்லது பங்கேற்பாளர்கள் என்றும் அழைக்கப்படும்) மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது.ஆட்டத்தில் கலந்துகொள்ளும் ஆட்டக்காரரகளுக்கு வழக்கமாக ஒரு நாளைக்கு ஒரு சவாலாக அன்று முடிக்கப்பட வேண்டிய வேலையை நிர்வாகிகள் வழங்குவர். அவற்றை ஆட்டக்காரர்கள் முடிக்க வேண்டும். அவற்றில் சில தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளும் கடமைகளும் உள்ளடக்கியது.சில பணிகள் முன்கூட்டியே கொடுக்கப்படக்கூடும், அடுத்தடுத்தக் கட்டங்கள் முடிந்து. இறுதிப்பணியாக தற்கொலைசெய்துகொள்வதாக முடியும்.
கடைசி விளையாட்டு 50 வது நாளில் நிறைவுறும். துவக்கக் கட்டத்தில் சவால்கள் மிக எளிதாகவே இருக்கும். ஒரு நீலத் திமிங்கிலத்தை வரைய வேண்டும், தனியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும், இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும். இவற்றில் ஒவ்வொன்றையும் பங்கேற்பாளர் செய்து முடிக்க முடிக்க, அவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மெல்ல படிநிலைகள் ஏற ஏற சவால்கள் கடினமாகிக்கொண்டே போகும். இரவில் தனியாகப் பேய்ப் படம் பார்ப்பது, கையில் பிளேடால் வரைவது, கண்ணை மூடிக்கொண்டு மிக வேகமாக மிதிவண்டியில் பயணிப்பது, பிற பங்கேற்பாளர்களின் சவால் கானொளிகளைக் காண்பது என்று நீளும். இவற்றை தாங்கள் நிறைவேற்றிய சவாலான செயல்களை படம்பிடித்து நிர்வாகிக்கு அனுப்பவேண்டும்.

இந்தியாவில் தற்கொலை நிகழ்வு

2017 ஜூலை 30 இல், 14 வயதான மன்பிரீத் சிங் என்ற சிறுவன் மும்பையில் உள்ள அந்தேரியில் (கிழக்கு) கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான். மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு நீல திமிங்கல விளையாட்டால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார், ஆனால் மும்பை காவல்துறை அந்த விளையாட்டை சிறுவன் விளையாடியதாக ஆதாரங்கள் இல்லை என்று கூறினர்..
 



உயிரைக் குடிக்கும் புளு வேல் கேம்: விளையாட்டைப் பற்றி தெரியுமா?...பெற்றோர்களின் கவனத்திற்கு.... Reviewed by Author on September 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.