அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோர் பிள்ளைகள் மட்டில் கவனமெடுங்கள்.....புதிய பிரச்சினை.....நீலத்திமிங்கில விளையாட்டு....

இலங்கையில் சற்று முன் Prashath Dhoni என்ற 17வயது சிறுவன் ப்ளூ வேல் இணையத்தில் சிக்கி தனது உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்த சம்பவம் Veechukkalmunai பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தனது இளம் வயதில் சமூக வலைதளங்களில் அடிமையானமையே இத்தற்கொலை முயற்ச்சிக்கு காரணம் என வைத்தியரகள் தெறிவிக்கின்றனர்.
இணையத்தில சஞ்சரிக்கும் போது தன்னை அறியாமல் சைன் அப் செய்யப்படும் ப்ளூ வேல் போன்ற வலைதளங்கள்
மாணவர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரை காவு கொள்ளும் என்பதை பெற்றோர் கவனத்திற் கொள்ளவும்.

ஒரு வேளை நீங்கள்.... Blue whale suicide game.. விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தால்  அதை விட்டு வெளியே வரவும் .... உயிரைக்குடிக்கும் விளையாட்டு அவதானமாய் இருங்கள்


தற்கொலை விளையாட்டில் இருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள் நீலத் திமிங்கில விளையாட்டு (Blue Whale Game, 
  "புளூவேல் சேலஞ்" என்றும் அழைக்கப்படுவது, பல நாடுகளிலும் இருப்பதாகச்சொல்லப்படுவது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு.
இந்த விளையாட்டுக் காலமான 50 நாள்களில் விளையாடுபவர்கள் நிர்வாகிகளால் ஒதுக்கப்படும் பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பதாகும். "புளூவேல்" என்ற சொல், கரைக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளும் கடற் திமிங்கலங்களின் நிகழ்வுகளிலிருந்து வந்தது.

 இதுவரை உலகம் முழுவதும் இந்த விளையாட்டு சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
நீலத்திமிங்கில விளையாட்டு 2013 இல் உருசியாவில் VKontakte சமூக வலைதளத்தின் "இறப்புக் குழு" என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களில் ஒன்றான "F57" உடன் தொடங்கியது,[  இந்த விளையாட்டால் 2015 இல் முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உளவியல் மாணவரான பிலிப் புடகின் என்பவர் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். இதுபற்றி புடகின் எந்த மதிப்பம் இல்லாமல் இருப்பவர்களை தற்கொலை செய்யவைத்து அதன் மூலம் சமூகத்தை "சுத்தம்" செய்வதாகக் கூறினார்.


2016 ஆம் ஆண்டில் உருசியாவில் நீல திமிங்கல விளையாட்டானது, ஒரு பத்திரிகையாளர் எழுதிய ஒரு கட்டுரையால் இளைஞர்களிடையே பரவலாக பிரபலமானது, இதைத் தொடர்புபடுத்தி பல தற்செயலான தற்கொலைகளை நீலத் திமிங்கிலத்துடன் தொடர்புபடுத்தப்பட்டன. இதனால் உருசியாவில் இது பீதியை ஏற்படுத்தியது.[13] பின்னர், புடகின் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது "குறைந்தது 16 இளம் பெண்களைத் தற்கொலை செய்ய தூண்டியதாக" குற்றம் சாட்டப்பட்டது,   இது உருசியாவில் தற்கொலைத் தடுப்பு சட்டம் ஏற்பட வழிவகுத்தது. மேலும் நீலத் திமிங்கல நிகழ்வு குறித்த உலக அளவிலான கவலைகளை ஏற்படுத்தியது. இது சீனாவில் "மனித எம்பிராய்டரி" போன்று அதிகரித்துவரும் சுய-தீங்கு போக்குகளுடன் இணைத்து நோக்கப்படுகிறது.


பெற்றோர் பிள்ளைகள் மட்டில் கவனமெடுங்கள்.....புதிய பிரச்சினை.....நீலத்திமிங்கில விளையாட்டு.... Reviewed by Author on September 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.