அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்துங்கள் - முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா


இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்கியா அகதிகளை இந்திய மத்திய அரசு மியன்மாருக்கு நாடு கடத்துமானால், அது ஈழத் தமிழ் அகதிகளையும் நாடு கடத்த வேண்டும் என காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜம்மு, ஐதராபாத், ஹரியானா,உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் டெல்லிப் பகுதிகளில் அண்ணளவாக நாற்பதாயிரம் ரொஹிங்கிய அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் சிலர் அல்-கொய்தா, அல் உம்மா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றில் நேற்று பிரமாணப் பத்திரம் ஒன்றை கையளித்திருந்தது.

உரிய அனுமதியின்றி அகதிகளாக வந்தவர்கள் இந்தியாவில் வாழ உரிமை அற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள இந்திய மத்திய அரசு, அவர்களை மீண்டும் மியன்மார் அனுப்ப தாம் திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதை முற்றாக எதிர்ப்பவர்களில் ஒருவரான காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ரொஹிங்கியா அகதிகளை இந்தியா நாடு கடத்துவதானது சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.  அவ்வாறு இந்தியா நாடு கடத்துமானால், இந்தியாவில் அடைக்கலம் அடைந்துள்ள மதிப்பிற்குரிய தலாய் லாமாவையோ அல்லது இந்தியாவில் தங்கியுள்ள திபெத்திய அகதிகளையோ நாடு கடத்த முன்வருமா என தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமன்றி தமிழகத்தில் தஞ்சம் புகுந்து வாழும் ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்ப இந்தியா முன்வருமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பி இருக்கிறார்.

ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்துங்கள் - முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா Reviewed by Author on September 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.