அண்மைய செய்திகள்

recent
-

"நிலத்துக்குப் போராடுவதா? வாழ்க்கைக்குப் போராடுவதா?

விவ­சா­யம் மற்­றும் மீன்­பி­டியை நம்பி வாழும் மக்­க­ளின் வளங்­களை இரா­ணு­வத்­தி­னர் கைய­கப்­ப­டு­தி­யுள்ள நிலை­யில் பொரு­ளா­தார வச­தி­க­ளின்றி வாழும் நாம் சொந்த நிலத்துக்காகப் போரா­டு­வதா? அல்­லது நாளாந்த வாழக்­கையை கொண்டு நடத்­து­வ­தற்­கா­கப் போரா­டு­வதா? என கேப்­பா­பி­லவு மக்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

கேப்­பா­பிலவு பூர்­வீக நிலத்தை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக கேப்­பா­பி­லவு காணி உரி­மை­யா­ளர்­கள் தொடர் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.
138 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 482 ஏக்­கர் காணி­களை விடு­ விக்­கு­மாறு வலி­யு­றுத்தி கடந்த மார்ச் மாதம் முத­லாம் திகதி முதல் தொடர் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் இடம்­பெற்று வரு­கின்­றது.

எனி­னும் தமது போராட்­டத்தை பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தி­யிலே அந்த மக்­கள் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர் இது தொடர்­பாகக் கருத்­துத் தெரி­விக்­கும் போது அவர்­கள் மேற்­கண்­ட­வாறு கூறி­னர்.

‘காணா­மல்­ஆக்­கப்­பட்ட எம் பிள்­ளையை தேடு­வதா? அல்­லது சொந்த நிலத்தை மீட்­ப­தற்­கான போராட்­டத்தை முன்­னெ­டுப்­பதா? ஒன்­பது வரு­டங்­க­ளாக காணி­களை இழந்து அவற்றை மீட்­கும் போராட்­டத்­தில் நாம் ஈடு­பட்டு வரும் நிலை­யில் இது­வரை காணி­கள் விடு­விப்­பது தொடர்­பில் எந்­த­வித தீர்­மா­ன­மும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை” என­வும் அவர்­கள் கவ­லை­ய­டைந்­த­னர்.

"நிலத்துக்குப் போராடுவதா? வாழ்க்கைக்குப் போராடுவதா? Reviewed by Author on September 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.