அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் விசாரனைக்கு அழைப்பு

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரனைக்கு வருமாறு கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரனைப்பிரிவினூடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

-மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த விகாரை அமைப்பது தானா நல்லாட்சி என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடையம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை(25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியதோடு,குறித்த விடையம் தொடர்பாக ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார்.

-மேலும் எமது நியாய பூர்வமான வேண்டுகையை புறக்கணித்து எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த திறப்பு விழா நடை பெற்றால் சனநாயக ரீதியில் கறுப்பு கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களிற்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலே மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரனைப்பிரிவின் 2 ஆம் பிரிவில் விசாரனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,

எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரனைப்பிரிவின் 2 ஆம் பிரிவில் விசாரனைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானை கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரனைப்பிரிவினுடாக இன்று புதன் கிழமை(27) மதியம் எனக்கு கிடைத்துள்ளது.என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

போல் நிஷந்தன்


மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் விசாரனைக்கு அழைப்பு Reviewed by NEWMANNAR on September 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.