அண்மைய செய்திகள்

recent
-

சைகை மொழிக்கு அங்கீகாரம்!


சைகை மொழியை அங்கீகரிப்பதற்கான, ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சைகை மொழியானது’ விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக, அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக, சைகை மொழியை ஏற்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், பிரேரிக்கப்பட்டுள்ள சைகை மொழி சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


சைகை மொழிக்கு அங்கீகாரம்! Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.