அண்மைய செய்திகள்

recent
-

உண்ணா நோன்பின் மகத்துவத்தை உலகுக்கு போதித்த திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள் இன்று!


பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27,1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். இவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளராகவும் இருந்தவர். இவர், கடந்த 1987-ம் ஆண்டு, இலங்கையில் மையம்கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கிய நாள் இன்று.

  • பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

  • புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

  • இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

  • வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

  • இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987 செப்டம்பர் 15ல் உண்ணாவிரதம் தொடங்கி, 1987 செப்டம்பர் 26-ம் தேதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் மரணம் எய்தினார்.

பிராபாகரனுடன் திலீபன்

இந்த உண்ணாவிரதம் வேண்டாம் என்று மறுத்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம்  தியாகி திலீபன் கூறிய வார்த்தைகள்     
" நமது கொள்கையின் தீவிரத்தை நிரூபிக்க இதை விட்டால் வேறு வழியில்லை. நாம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதை ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் சொல்லவேண்டிய தருணம் இது. இன்னொரு ராணுவம் எங்கள் மண்ணில் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய தருணம். அதையும் இந்தியாவின் வழியிலேயே சொல்ல உண்ணாவிரதம்தான் ஒரே வழி " என்று சொல்லி ஒப்புதல்பெற்றார்.

உண்ணா நோன்பின் மகத்துவத்தை உலகுக்கு போதித்த திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள் இன்று! Reviewed by Author on September 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.