அண்மைய செய்திகள்

recent
-

இந்து மத வழிபாட்டிடங்களை ஆக்கிரமிக்கும் புத்தர் சிலைகள்



வடக்கிலுள்ள இந்துக்களின் மத வழிபாட்டு தலங்களை புத்தர் சிலைகளின் மூலம் ஆக்கிரமிக்கும் இரா ணுவத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

வவுனியா மூளாய்மடு, பேயாடி கூழாங்குளம் மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களின் வளாகத்திற்குள் புத்தர் சிலைகளை அமைத்து வரும் இராணுவம் அதனை தொடர்ந்தும் பராமரித்து வருகின்றது.

வவுனியா மூனாய்மடு பேயாடி கூழாங்குளம் பகுதியிலுள்ள நாகபூ சணி அம்மன் ஆலய வளாகத்திற்குள் பெரியதொரு புத்தர் சிலையை 56 டிவிசன் படைமுகாமை சேர்ந்த இராணுவம் அமைத்துள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட புத்தர் சிலையானது நாகபூசணி அம்மன் ஆலயத்தை விட உயரமான  நிலம் எழுப்பி பெரிதாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் இந்து ஆலயத்திற்குள் வெள்ளம் புகுந்து இடர் ஏற்படுகின்றது.

இது தவிர இந்து ஆலயத்தின் பெயர் பலகை சிங்கள மொழியினாலும் மொழிபெயர்க்கப்பட்டு மாற்றிய மைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் சுற்று மதிலும் முழுவதுமாக பௌத்த அடையாளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் வலது பக்கம் முன்பக்கம் இராணுவ முகாம் காணப்படுவதா லும் சுதந்திரமாக வழிபாட்டில் ஈடுபட முடியவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் மேற்படி இந்து ஆலயத்தில் நடைபெறும் பூஜை நிகழ்வுகளின் போது இராணுவம் அமைத்து வைத் துள்ள புத்தர் சிலை பெரும் இடை யூறாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதே போன்று தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு நெருக்கமாக புத்தர் சிலை ஒன்றை நிறுவி அங்கும் ஆலய வளாகத்தை ஆக்கிர மிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள ஒவ்வொரு பெரிய படை முகாம்களின் வீதியின் கரைகளில் பல்வேறு புத்தர் சிலைகளை அமைத்து அவற்றைப் படையினரே பராமரித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

இதே வேளை பருத்தித்துறை துறைமுகம் பகுதியில் உள்ள வைரவர் கோவிலுக்கு அருகிலும் புத்தர் சிலையை இராணுவம் அமைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்து மத வழிபாட்டிடங்களை ஆக்கிரமிக்கும் புத்தர் சிலைகள் Reviewed by Author on September 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.