அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமிழ் நகர் பகுதியில் 7 கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது-



மன்னார் எமிழ் நகர் பகுதியில் 7 கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது-

சென்-ஜோசப் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஜீ.டிக்கோனி

மன்னார் எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு அரங்கிற்கு மேலும் 2 கோடி ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் குறித்த விளையாட்டு அரங்கு அமைக்கும் பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பனங்கட்டிக்கோட்டு  சென்-ஜோசப் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஜீ.டிக்கோனி தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு அரங்கிற்கு ஏற்கனவே 5 கோடி 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் முயற்சியுடன் குறித்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்ட போதும்,நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.

-இந்த நிலையில் சென்-ஜோசப் விளையாட்டுக்கழக பிரதி நிதிகள் அண்மையில் கொழும்புக்குச் சென்று பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யுடன் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து நிதி பற்றாக்குறை தொடர்பில் தெரியப்படுத்தினோம்.

இந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யின் முயற்சியுடன் மேலும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் சுமார் 7 கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இடம் பெறவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து வேளைத்திட்டத்தை பார்வையிட உள்ளனர்.

எனவே நிதியை பெற்றுத்தர பல்வேறு  வகையிலும் உதவிகளை மேற்கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு மக்கள் சார்பாகவும், பனங்கட்டிக்கோட்டு  சென்-ஜோசப் விளையாட்டுக்கழகத்தினர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் எமிழ் நகர் பகுதியில் 7 கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது- Reviewed by Author on October 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.