அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் ஈழ புகலிட கோரிக்கையாளர்கள்?


அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழ புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் ஈழ அகதிகள் பலர் நாடுகடத்தப்படலாம் என அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் அடைக்களம் கோரி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்கள் சென்ற நிலையில் அவர்கள் அனைவரும் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மனுஸ் தீவில் உள்ள புகலிட கோரிக்கையாளர்களின் முகாமை இந்த மாதத்துடன் மூடுமாறு பப்புவா நியுகினி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் காரணமாக மனுஸ் தீவிலிருந்து அமெரிகாவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் நவுறு தீவுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் குடியேற விண்ணப்பிக்காத ஏனைய புகலிட கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவுக்கே அழைத்து செல்லப்படவுள்ளதாவும், இதன் காரணமாக அவர்கள் நாடுகடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலிருந்து அடைக்களம் கோரி அவுஸ்திரேலியா சென்ற பலர் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் ஈழ புகலிட கோரிக்கையாளர்கள்? Reviewed by Author on October 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.