அண்மைய செய்திகள்

recent
-

வட - கிழக்கு இணையாவிடில் கிழக்கு பறிபோய்விடும் வடக்கு மாகாண முதலமைச்சர் எச்சரிக்கை


வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படா விட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு என்ன நடந்ததோ அதுவே நாளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கும் நடக்கும். அதாவது கிழக்கு பறிபோய்விடுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.    

மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு இணைப்பை நடை முறைப்படுத்த விடாமலே அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது. தமிழ் பேசும் திருகோணமலை மாவட்டம் முப்பகுதியினரின் மாவட்டமாகக் கடந்த ஐம்பது வருடங்களுக்குள்ளேயே மாற்ற ப்பட்டுள்ளது.
சமஷ்டியில் சில தனித்துவ அலகுகளை யும் உள்ளடக்கலாம். திருகோணமலை நக ரத்திற்கென ஒரு சிறப்பு நிர்வாகத்தை ஏற்படுத்தலாம். வட கிழக்கு இணைப்பு எதற்காக கோரப்படுகின்றது என்பதை நாம் முற்றாக அறிந்திருக்க வேண்டும்.

தமிழ் பேசும் பிரதேசங்கள் ஒன்றாக இல்லாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு நடந்ததே மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் நடக்கும். அரசாங்கத்திற்குப் பல அனுசரணைகள் உண்டு. நாட்டின் மத்திய அரசாங்கம் பெரும் பான்மையினரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

கூடிய நாட்டு மக்கள் பெரும்பான்மையினத்தவர்கள். பிறநாடுகளுடன் ஒப்பந்தங்கள் வைத்துக் கொள்ளும் அதிகாரம் அவர்களுடையது. மகாவலி அபிவிருத்தி போன்ற சட்டங்களை அவர்களே நடைமுறைப்படுத் துகின்றார்கள்.

ஆகவே தான் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தையும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தையும் பெரும்பான் மையினத்தவரின் குடியேற்ற நிலங்களாக மாற்றிவருகின்றார்கள்.

திருகோணமலைக்கு விசேட நிர்வாக அந்தஸ்தை அளித்து, மிகுதி வடகிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களை ஒன்றிணைத்து முஸ்லிம் மக்களுக்கு அதனுள் ஒரு தனி அலகை உருவாக்குவதே உசிதமெனத் தோற்றுகின்றது என்றார் முதலமைச்சர்.


வட - கிழக்கு இணையாவிடில் கிழக்கு பறிபோய்விடும் வடக்கு மாகாண முதலமைச்சர் எச்சரிக்கை Reviewed by Author on October 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.