அண்மைய செய்திகள்

recent
-

மற்றவர்களிடம் இருந்து பேசக் கற்றுக் கொள்ளுங்கள்....


ஒரு காலத்தில் தமிழ் அரசியல் என்றால் அதற்குத் தனி மதிப்பு. அந்தளவுக்கு சட்ட வல்லுநர்களும் பேச்சாளப் பீரங்கிகளும் தமிழ் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்களும் தமிழ் அரசியலை அலங்கரித்தனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் உலகறிந்த சட்ட மேதை. நீதிமன்றங்களில் அவரின் வாதத்தைப் பார்ப்ப தற்காகவே அங்கு மக்கள் கூடுவர்.

தந்தை செல்வநாயகம் சிங்களத் தலைவர் களும் மதிக்கின்ற அரசியல் ஞானி. பாராளு மன்றத்தில் தந்தை செல்வநாயகம் பேசுகிறார் என்றால், அத்தனை சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பிரசன்ன மாகி இருப்பதுடன், அவரின் உரையை உற்றுக் கவனிப்பர்.

அந்தளவுக்கு அவரின் உரையில் தத்துவம் இருக்கும். அரசியல் சித்தாந்தம் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதம் இருக்கும்.

இதேபோன்றுதான் தளபதி அமிர்தலிங்க மும். அவர் பாராளுமன்றத்தில் பேசினால் சபை அதிரும். அமிர்தலிங்கத்துக்கு ஈடாகப் பேசுவ தற்கு எங்களிடம் ஆட்கள் இல்லையே என்று சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை கொள்வராம்.

இவை ஒருபுறம் இருக்க, தளபதி அமிர்த லிங்கம்,  சிம்மக் குரலோன் எம்.சிவசிதம்பரம், இரும்பு மனிதன் நாகநாதன், கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கம் இப்படி ஒரு பெரும் பட்டியலை தந்துவிடலாம்.

இவர்கள் அன்று தேர்தல் மேடைகளில் ஆற்றிய உரைகள்தான் இன்றுவரை இலங் கைத் தமிழரசுக் கட்சியின் அடிக்கட்டுப் பசளை யாக உள்ளது.
எல்லாம் ஒரு காலம் என்று கூறுமளவுக்கு  இப்போது நிலைமை வந்துவிட்டது. தமிழ் மக்க ளின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதிலும் அடித்துப் பேசுவதிலும் நம் அரசியல்வாதிகள் தடக்குப்படுகின்றனர்.

போதாக்குறைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங் கம் ஆற்றுகின்ற பேச்சுக்களைப் பார்க்கும் போது கடவுளே! தமிழரசுக் கட்சியின் பாசறை படைத்த தமிழ் மகனா? இவர் என்று கூறி நம் தலையில் அடிக்க வேண்டும் போல் உள்ளது.
அந்தளவுக்கு அவர் ஆற்றுகின்ற உரைகள் தமிழ் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகின் றன.

இவ்வாறு நம் தமிழ் அரசியல்வாதிகளின் உரைகள் இருக்க; சிங்கள, முஸ்லிம் அரசி யல்வாதிகள் ஆற்றுகின்ற உரைகளைக் கேட் கும்போது, இவர்களைப் போல எங்களிடம் பேசுவதற்கு ஆட்கள் இருந்தால் என்று எண் ணத்தோன்றும்.

அந்தளவுக்கு சிங்கள, முஸ்லிம் அரசியல் வாதிகள் தர்க்கரீதியாக, நுட்பமாக, தங்கள் கருத்தை நியாயப்படுத்தக் கூடியவாறு உரை யாற்றுகின்றனர்.

அதில் சில இடங்களில் தமிழ் மக்களுக்காக சிங்கள அரசியல்வாதிகள் சிலரும் மல்வத்த பீட மும் கூறுகின்ற கருத்துக்கள் அற்புதமானவை.

நாங்கள் கூறவேண்டிய கருத்துக்களை அவர்கள் கூறுகின்றனர் எனும்போது அவர் களிடம் இருந்து நம் தமிழ் அரசியல்வாதிகள் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாய மானவை என மக்கள் மத்தியில் நிரூபிப்பதற்கு பேச்சுக்கலை தவிர்க்க முடியாத ஒன்று என்ப தால் மற்றவர்களிடம் இருந்தும் நாம் பேசக் கற் றுக் கொள்வது அவசியமாகின்றது.
-நன்றி- வலம்புரி-

மற்றவர்களிடம் இருந்து பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.... Reviewed by Author on October 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.