அண்மைய செய்திகள்

recent
-

தேசியரீதியில் சாதனையுடன்....மன்.தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவர்கள்...

மன்னாருக்குப்பெருமை  சேர்த்துள்ள மன்.தட்சனாமருதமடு மாகா வித்தியாலய மாணவர்கள்...

மடுவலையப்பாடசாலை கிராமத்தில் அமைந்துள்ளது பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வசதிகள் இல்லை மேலதிக செயற்பாடுகள் இல்லை ஆனால் தங்களின் திறமைகளை இருக்கும் சிறிய வசதிகளோடு விடாமுயற்ச்சியால்  முயன்று ஆசிரியர்களின் வழிநடத்தல் அதிபரின் மேற்பார்வை பெற்றோரின் ஊக்கம் ஒன்றாக இணைந்து செயல்திறன் ஆனதால் இப்பாடசாலை 2014 ஆம் ஆண்டில் இருந்து 2017 ம் ஆண்டு வரை இளம்கண்டுபிடிப்புக்கள் 2ம் 3ம் இடங்களை வடமாகாணத்திலும் தேசியரீதியிலும் பெற்றுவந்துள்ளனர்.
  • 2014-Safe Player 3rd place-M.dinojan
  • 2014-Safe Motor Bike Stand 2nd place-L.Senthuran--S.Gwthaman
  • 2014-Harmless Welding Glass 2nd Place-K.Dinosan
  • 2015-Modified Hammer 3rd Place--J.Hanusijan- RR.Thanushan
  • 2016-Modified Water level Equipment 1st Place-K.kirusan
  • 2017-Electric Hammer --1st Place K-Abishek-Gold medal
  • 2017-Filtering Water Pump--3Place--RLosan-Brownce-medal

 இம்முறை முதல் தடவையாக தங்கப்பதக்கத்தினையும் வெண்கலப்பதக்கத்தினையும்  பெற்றுள்ளனர்
Institution of Engineers Sri Lanka (IESL) நடாத்திய தேசியமட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான (Efficiency Improvement in products and Processes Catagory). போட்டியில் தங்க பதக்கத்தை மன்னார் தட்சணாமருதமடு மாகா வித்தியாலய மாணவன் K. அபிஷேக்கும் வெண்கலப்பதக்கத்தை R.லோசனும் பெற்றுக்கொண்டனர்.

29 ஜுலை யாழ் பொறியியல் பிரிவு கிளிநொச்சியில்  வடமாகாணத்தி ல் தேர்வாகி தேசியரீதியில் 13-15-10-2017  05 பிரிவில் 950 இளம்போட்டியாளர்கள் கலந்து கொண்டுதான் இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ளன

இச்சாதனையை புரிவதற்கு பெரும் உதவியாக இருந்த
 அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் K.துயந்தனுக்கும்
 IESL-VADAKKIN CHAPTER CHAIRMAN ENG.BARATHITHASAN அவர்களுக்கும் MANNAR  JIY ORGANIZING COMMITEE CHAIRMAN RAJKUMAR AND ANANTH அவர்களுக்கும்
ஒழுங்கமைத்த வலையக்கல்விப்பணிப்பாளர் அவர்களுக்கும் உதவிக்கல்வி பணிப்பாளர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைச்சமூகம் குறிப்பாக சாதனைநாயகர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்.

 -வை-கஜேந்திரன்-

 







 இவை மாணவர்களின் 15 க ண்டுபிடிப்புக்கள்






தேசியரீதியில் சாதனையுடன்....மன்.தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவர்கள்... Reviewed by Author on October 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.