அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் இளைஞர்,யுவதிகள் பகிஸ்கரிப்பு.

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சியை கற்று வரும் இளைஞர் யுவதிகள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து இன்று(26) வியாழக்கிழமை காலை பயிற்சி நிலையத்திற்கு செல்லாது வெளியில் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இடம் பெற்று வருகின்ற தொழிற்பயிற்சியில் 278 இளைஞர்,யுவதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அவர்களில் 50 இளைஞர்களும் 228 யுவதிகளும் அடங்குகின்றனர்.

-குறித்த பயிற்சி நிலையம் இராணுவத்தினரை மையப்படுத்தி அவர்களின் தலைமையில் சகல விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

-குறித்த பயிற்சி நிலையத்தில் ஆங்கில பயிற்சி மற்றும் தகவழ் தொழில் நூற்ப பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றது.

-எனினும் குறித்த நிலையத்தில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடக்கின்ற போதும் அங்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக இளைஞர்,யுவதிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக அதிகமான பயிற்சியாளர்கள் யுவதிகளாக உள்ள நிலையில் சிங்கள ஆண் ஆசிரியர்கள் உள்ளதாகவும்,இதனால் யுவதிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

-குறித்த நிலையத்தில் ஆங்கில பயிற்சிகள் இடம் பெற்று வருகின்ற போதும், தகவல் தொழில் நூற்ப பயிற்சி இடம் பெறுவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

-குறித்த பயிற்சி நிலையத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும், அவ்விடையம் தொடர்பாக பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் யுவதிகளுக்கு பயிற்றுவிக்கும் சிங்கள ஆசிரியர்கள் நடந்து கொள்ளுகின்ற விதம் தங்களுக்கு பல்வேறு துன்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

-எனவே தமது பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி இன்று(26) வியாழக்கிழமை காலை பயிற்சி நிலையத்திற்குள் செல்லாது வெளியில் நின்று எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம்.என பயிற்சி நிலையத்திற்கு செல்லாது வெளியில் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக இளைஞர்,யுவதிகள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி மேஜர் குணதிலக்க அவர்களிடம் வினவிய போது,,,,,

-தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் குறித்த பயிற்சி நிலையம் செயற்படுகின்றது.இலங்கையில் 52 நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றது.

-இராணுவ அதிகாரிகளின் கீழ் குறித்த நிலையங்கள் செயற்படுகின்றது.எமது பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்ற இளைஞர்,யுவதிகள் மத்தியில் ஒழுக்கம், ஆழுமை, தலைமைத்துவம் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

-குறித்த பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் இளைஞர்களுக்கு எமது நிலையத்தின் கட்டுப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளோம்.

அதற்கு அமைவாக உரிய முறையில் தலைமுடி சரி செய்து, முகச்சவரம் செய்து வருமாறு பல தடவை தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில் இன்று வியழக்கிழமை 20 இளைஞர்கள் உரிய முறையில் முகச்சவரம் செய்யாது வந்தார்கள்.அவர்களை சென்று உரிய முறையில் முகச்சவரம் செய்து வருமாறு தெரிவித்தோம்.

அவர்கள் வெளியில் சென்றனர்.5 இளைஞர்கள் உரிய முறையில் முகச்சவரம் செய்து வந்தனர்.ஏனைய 15 பேரூம் வெளியில் நின்று பயிற்சி நிலையத்தினுள் இருந்த ஏனைய இளைஞர்,யுவதிகளை வெளியில் அழைத்தனர்.இதுவே பிரச்சினைக்கான காரணம்.எமது கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயற்படாத இளைஞர்,யுவதிகள் இடை நிறுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.







மன்னார் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் இளைஞர்,யுவதிகள் பகிஸ்கரிப்பு. Reviewed by NEWMANNAR on October 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.