அண்மைய செய்திகள்

recent
-

காலி மோதல்: ஊரடங்கு சட்டம் அமுலில்! 19 பேர் கைது


காலி - கிந்ததொட்ட பகுதியில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
காலி - கிந்ததொட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அத்துடன், நபர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் 200ற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் 100ற்கும் அதிகமான விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

காலி மோதல்: ஊரடங்கு சட்டம் அமுலில்! 19 பேர் கைது
இலங்கையின் தென் பகுதியில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, அந்த பகுதியில் ஊரடங்கு சட்டம்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி கிங்தொட்டை பிரதேசத்தை அண்மித்துள்ள ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இந்தஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கையொன்றின்மூலம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வெலிபிடிமோதர, மஹஹபுகல, ருக்வத்த, கிங்தொட்டை, பியதிகம மற்றும் குருந்துவத்த ஆகிய பகுதிகளிலேயே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்200ற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் 100ற்கும் அதிகமான விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் 19 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

இந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 9 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காலியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவுகுறிப்பிட்டுள்ளது.
காலி மோதல்: ஊரடங்கு சட்டம் அமுலில்! 19 பேர் கைது Reviewed by Author on November 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.