அண்மைய செய்திகள்

recent
-

உலக மீனவர்தினம் 21- 11- 2017 மன்னாரிலும் கலந்துரையாடலும் கருத்துப்பகிர்வும்


மீனவர்தினத்தை முன்னிட்டு மன்னார் நகர  மண்டபத்தில்  கார்த்திகை  21 இன்று காலை 11 மணியளவில் MSEDO அமைப்பின் தலைவர் திருவாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில்வடமாகாணத்தில்  உள்ள மீன்  பிடியை வாழ்வாதாரமாக  கொண்ட ஆண் மற்றும் பெண் மீனவர்கள் சுமார் 500 மீனவ  பிரதி நிதிகளின் பங்குபற்றுதலுடன்   இடம் பெற்றது.

 "நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்"  என்ற  கருப்பொருளில்  இடம் பெற்ற இந்த நிகழ்வை  மன்னார் சமூக  பொருளாதார  மேம்பாட்டுக்கான நிறுவனம்  ஒழுங்கமைத்திருந்தது  இவ் நிகழ்வில் 
  • மன்னார்
  • கிளிநொச்சி
  • யாழ்ப்பாணம் 
  • முல்லைதீவு 
போன்ற மாவட்டங்களில்  இருந்து பெண் மற்றும் ஆண் பிரதிநிதிகள்  பலர் கலந்து கொண்டனர் மேற்படி
 நிகழ்வில் மீனவர்கள்  யுத்தம்  முடிவடைந்த  நிலையில்  எதிர்ப்பட்டு  வரும் பிரச்சினைகள் மற்றும் சட்ட  ரீதியான  தடைகள்  தொடர்பான  கலந்தாலோசிப்பும்   அவ் பிரச்சினை தொடர்பாக மீனவர்கள் மேற்கொள்ள  வேண்டிய  செயட்பாடுகள்  தொடர்பாகவும்  கலந்தாலோசிக்கப்பட்டது.

UPR-மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் கலந்துரையாடும் அமைப்பாக உள்ளது இவ்வமைப்பு 4ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெனிவாவில் கூடும் இம்முறையும் கடந்த 15ம் திகதி ஜெனிவாவில் கூடியபோது இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குற்றச்சாட்டுக்கள்236 முன்வைத்தபோதும் இலங்கை அரசாங்கத்தால் 54 பிரச்சினைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விடையங்களாக

  • சட்டவிரோத மீன்பிடி
  • மீனவக்குடும்பங்களின் குடியிருப்புக்கள் மீட்கப்படவேண்டும்
  • காணமல் போன மீனவர்கள் தொடர்பாக தீர்வு
  • இறந்த மற்றும் காணமல் போன மீனவர்களுக்கான கொடுப்பனவுகள்
  • மீனவர்களுக்கான உதவித்திட்டங்கள் 
  •  மீனவர்களுக்கு எதிரான சில இறுக்கமான சட்டங்கள்
  • தென்பகுதி மீனவர்களின் வருகை

      இந்த நிகழ்வில் பெரும்பாலான  மீனவர்கள்  தங்களுடைய மீன்பிடிதுறை இராணுவதினருடைய  கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்  இவ் துறைகளை  மீட்டு  தருமாறும்  அதே  போன்று தங்களுடைய வாடிகள்  கடல்  சார்ந்த  காணிகளும்  இராணுவத்தினருடைய  கட்டுப்பட்டில் இருப்பதனால்  தங்கள் காணிகளையும்  மீட்டுதர  வழிவகைகளை செய்து  தருமாறும் கோரிக்கை  விடுத்தனர்  மேலும்  இந்திய மீனவர்களுடைய  வருகை  மற்றும் தென் பகுதி  மீனவர்களுடைய  அத்து மீறிய  வருகையும்  தடுக்குமாறும்  கோரிக்கை விடுக்கபட்டது.   குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி முறைகளை  உடனடியாக  தடை  செய்ய  உதவி புரியுமாறும்  வேண்டுகோள் விடுத்தனர் .

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் கலைநிகழ்ச்சிகளாகவும் இடம்பெற்றது
இங்கு மீனவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் அனைத்தினையும்  மகஜர்  மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்திலும் இன்றைய தினம் நடைபெறுகின்றது.


















உலக மீனவர்தினம் 21- 11- 2017 மன்னாரிலும் கலந்துரையாடலும் கருத்துப்பகிர்வும் Reviewed by Author on November 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.