அண்மைய செய்திகள்

recent
-

யாழில் 27 ஆண்டுகளின் பின் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது -


யாழ். வலி வடக்கு வயாவிளான் வடமூலைப் பகுதியில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதழை யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்துள்ளார்.
வயாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் இன்று நடைபெற்ற நிகழ்வில் குறித்த உறுதிச்சான்றிதழ் கையளிக்கப்பட்டுள்ளது. வயாவிளான் உத்தரமாதா தேவாலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் J/245 கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட நிலப் பகுதிகளே இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு மேலதிக மாவட்ட காணி ஆணையாளர் எஸ்.முரளிதரன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து, இந்தக் காணிகள் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் 27 ஆண்டுகளின் பின் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது - Reviewed by Author on November 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.