அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்-விமானம்: அனைவரும் பலி -


பிரித்தானியாவில் நடுவானில் சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதிக் கொண்டதில் அனைவரும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் Aylesbury நகரத்தின் Waddesdon Manor அருகில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வானில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக மோதிக் கொண்டதில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தை அறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்துள்ளதாகவும், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கையில், விமானம் சிறிய ரக விமானம் என்றும் அதில் பைலட் மட்டும் ஒருவர் இருந்ததாகவும், ஹெலிகாப்டரில் இரண்டு பேர் சென்றிருந்ததாகவும், கூறப்படுகிறது. இரண்டுமே இன்று Wycombe Air Park-கில் இருந்து தான் புறப்பட்டுள்ளது எனவும், இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு நடந்துள்ளது என்றும், விபத்து நடந்த சில நிமிடங்களிலே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் 12.06 மணிக்கு விபத்து நடந்த இடத்தை அடைந்துவிட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து Air Accidents Investigation Branch விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. விபத்திற்கான காரணம், இது எப்படி நடந்தது என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்-விமானம்: அனைவரும் பலி - Reviewed by Author on November 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.