அண்மைய செய்திகள்

recent
-

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சமீபத்தில் மர்மமான வெடிச்சத்தம் போன்ற ஒலி பெரியளவில் கேட்டது, இங்கு மட்டுமல்ல! இதே போன்ற சத்தம் இந்த ஆண்டில் உலகின் 64 இடங்களில் கேட்டுள்ளது.
மிச்சிகன் மாகாணம், பின்லாந்தின் லப்லாந்து பகுதி, பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள ஸ்வன்சீ நகரம், பிரித்தானியாவின் யார்க்ஷயர் கவுண்டி போன்ற முக்கிய பகுதிகளும் இதில் அடக்கமாகும்.
இந்த பயங்கர சத்தத்துக்கு ’பமா பூம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் பிர்மிங்காம் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ராடார் அல்லது செயற்கைக்கோள் மீது பெரிய தீ அல்லது புகைகள் ஏற்படுவதை குறிக்கும் எதையும் இதுசம்மந்தமாக நாங்கள் காணவில்லை.
இது நிலநடுக்கத்துக்கான அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளது.
ராணுவ பணிக்காக பயன்படுத்தப்படும் சூப்பர்சோனிக் விமானம் போன்ற ஒலிவேக விமானங்கள் மூலமாகவோ அல்லது விண்கற்கள் மூலமாகவோ சத்தம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளது.
ஆனால் இது குறித்து அமெரிக்க ராணுவம் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

இது குறித்து நாசாவின் அதிகாரி பில் குக்கி கூறுகையில், தரையில் வெடிப்பு அல்லது ஒளிர் விண்கற்கள் மூலமாக இச்சத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
இது நிச்சயமாக நிலநடுக்கத்தின் அறிகுறி கிடையாது என அமெரிக்காவின் புவியியல் துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த பயங்கர சத்தமானது பொதுமக்களை குழப்பமடைய செய்துள்ளது. வேல்ஸை சேர்ந்த ஒருவர் கூறுகையில், திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன், முதலில் துப்பாக்கி சூடு அல்லது பட்டாசுகள் வெடிப்பதாக நினைத்தேன்.

விண்கற்கள் பூமியில் மோதியதால் இந்த சத்தம் வருவதாக என் கணவர் கூறினார் என தெரிவித்துள்ளார்.
இப்படி உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட இந்த பயங்கர சத்தத்துக்கு பலர் விதவிதமான காரணங்களை கூறுகிறார்கள்.

ஆனால் விண்கற்களால் இது ஏற்பட்டிருக்கலாம் என தான் பலர் கருதுகிறார்கள்.
மத்திய ப்ளோரிடாவில் கடந்த மே 7-ஆம் திகதி இதே போன்ற சத்தம் கேட்டது, இது ரகசிய ராணுவ பணிகளால் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அதற்கேற்றால் போல் அமெரிக்க விமான படை, தங்கள் விமானம் கிரகத்தின் வட்டப்பாதையை சுற்றிவிட்டு கென்னடி விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது
உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன? Reviewed by Author on November 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.