அண்மைய செய்திகள்

recent
-

800 பில்லியன் டொலர்: சவுதி அரசின் உத்தரவால் அச்சத்தில் கோடீஸ்வரர்கள் -


சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு உள்ளிட்ட குற்றக்களுக்காக நூற்றுக்கணக்கான கோடீஸ்வரர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி இளவரசரான முகமது பின் சல்மானின் உத்தரவை தொடர்ந்து அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல், சொத்துக்கள் வாங்கியதில் கறுப்பு பணம் பதுக்கல் உள்ளிட்டவைகளால் பல நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் சட்டத்திற்கு புரம்பாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் 208 கோடீஸ்வரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 இளவரசர்கள், முன்னாள் அமைச்சர்களும் அடங்குவார்கள்.
முறைகேடுகளில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக நாடு முழுவதும் சுமார் 800 பில்லியன் டொலரை அரசாங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ய உள்ளனர்.
மேலும், சந்தேகத்திற்குரிய 1,700 வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அரசாங்க அதிகாரிகள் தங்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு முன்னதாக அவற்றை நாட்டை விட்டு வெளியேற்ற பெரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
800 பில்லியன் டொலர்: சவுதி அரசின் உத்தரவால் அச்சத்தில் கோடீஸ்வரர்கள் - Reviewed by Author on November 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.