அண்மைய செய்திகள்

recent
-

8நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் பிரான்ஸ் வெற்றி: இது ஒரு அங்கீகாரம் என மேக்ரான் நெகிழ்ச்சி -


எட்டு நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் ஐரோப்பிய வங்கி ஆணையத்தின் உரிமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
ஐரோப்பிய வங்கி ஆணையத்தின் உரிமைக்கான ஓட்டு எடுப்பு Brussels-ல் கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது.

இதற்கு ஆஸ்திரியா, பெல்ஜியம், செக்குடியரசு, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, Luxembourg மற்றும் போலாந்து போன்ற நாடுகள் பங்கு பெற்றன.
இந்த வாக்கெடுப்பு ஐரோப்பிய யூனியனில் இருக்கும் 27 நாடுகள் வாக்களித்தன. அதன் படி கடுமையாக நடந்த இந்த போட்டியின் இரண்டாவது சுற்றில் ஜேர்மனியின் Frankfurt நகரம் வெளியேறியது.

இறுதியாக அயர்லாந்து மற்றும் பிரான்சிற்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி 13-13 என்று சமநிலையில் முடிந்தது. அதன் பின் முந்தையை முடிவுகளை வைத்து பிரான்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வெற்றி குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில், பாரிசிற்கு ஐரோப்பிய வங்கி ஆணையத்தை வரவேற்கிறோம், இது பிரான்சிற்கும் ஐரோப்பிய உறுதிபாட்டையும் அங்கிகரீக்கிறது, அதுமட்டுமின்றி எங்கள் நாட்டிற்கு இது ஒரு பெருமை என குறிப்பிட்டுள்ளார்.

8நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் பிரான்ஸ் வெற்றி: இது ஒரு அங்கீகாரம் என மேக்ரான் நெகிழ்ச்சி - Reviewed by Author on November 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.