அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களே! கேள்வி கேட்கும் வல்லமை உங்களிடம் இருக்கிறது


தமிழ் அரசியல் கைதிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டம் நீடித்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து அகிம்சை வழியிலான தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையேசாரும்.

எனினும் கூட்டமைப்பின் தலைமை அது தொடர்பில் இம்மியும் கவனம் செலுத்தவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் கூட்டமைப்பின் தலைமை வேண்டாவெறுப்பாக நடந்து கொள் கிறது என்பது நிறுதிட்டமான உண்மை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மட்டுமன்றி தமிழ் மக்களின் நிலங்களை கபளீகரம் செய்து வைத்திருக்கும் படையினரிடமிருந்து அந்த நிலங்களை மீட்டு மக்களிடம் கையளிப் பதற்குக்கூட கூட்டமைப்பின் அரசியல் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம் நல்ல எடுத்துக் காட்டாகும்.

தமிழ் அரசியல் தலைமை எதுவும் செய்யாத நிலையில் கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

அதன் முடிவு அவர்களுக்கு வெற்றி யைக் கொடுத்தது. எனினும் அந்த வெற்றியிலும் பங்கு போடுவதற்கு தமிழ் அரசியல் தலைமை முற்பட்டதாயினும் மக்கள் அதற்கு இடம்கொடுக் காத காரணத்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

இதுவே தமிழ் அரசியல் தலைமையின் நிலைமையாக இருக்கிறது. இத்தகையதோர் சூழமைவில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கள் போராட்டம் நடத்துவதும் அதற்கு பொது அமைப்புக்கள் ஆதரவு வழங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்று.

அதேவேளை தமிழ் அரசியல் தலைமையின் இரட்டை வேடமும் தமிழ் மக்களின் உரிமை விட யத்தில் மிகப்பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

முக்கியமான இடங்களில் தாம் சொல்லு வதற்கு தமிழ் மக்களின் பரிபூரணமான ஆதரவு இருப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைமை, இன்னும் பல இடங்களை திரும்பிப் பார்க்காமல் விட்டுவிடுகிறது. இதுதான் ஏன் என்று புரியவில்லை.

இடைக்கால வரைவு தொடர்பாக பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங் குவதில் நமக்குப் பிரச்சினையில்லை என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கூறியதன் பொருள் நாங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். எனவே தமிழ் மக்களின் கருத்தாக நாம் கூறுவதே பெளத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பது எங்களுக்குப் பிரச்சினையில்லை என்ற கருத்தாகும்.

இதேபோன்று தீபாவளிப் பண்டிகைக் கொண் டாட்டம் அலரிமாளிகையில் நடந்தபோது எங்களின் ஆதரவு நூறு வீதம் ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் உண்டு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கூறினார்.

இவ்வாறு அவர் கூறி தீபாவளிக் கொண்டாட்ட விருந்தை உண்டு கொண்டிருக்கும்போது உண் ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாகிறது என்ற செய்தி வெளிவருகிறது.

இதுவே நிலைமை எனும்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குவது கட்டாயமானதாகும்.

அதேநேரம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும்  வடக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு வருமாறு யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருப்பது மிகச் சிறந்த தீர்மானமாகும்.

அதேவேளை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய விளக்கங்கள் நிறைய இருந் தாலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தோடு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் தமிழ் மக்களுக்கான உரிமை எவ்வாறு உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்கத் தவறிவிடாதீர்கள்.


நன்றி-வலம்புரி-
மாணவர்களே! கேள்வி கேட்கும் வல்லமை உங்களிடம் இருக்கிறது Reviewed by Author on November 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.