அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் கடுமையாக விமர்சித்ததை சிரித்துக்கொண்டே ரசித்து கேட்ட மஹிந்த -

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை முன்வைத்து கடுமையான தொனியில் உரையாற்றியபோது இதை சிரித்தவாறே மஹிந்த ராஜபக்ஸ கேட்டுக்கொண்டிருந்ததுடன், சம்பந்தனின் உணர்வை தாம் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான 6 ஆம் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் இரா.சம்பந்தன் சுமார் 50 நிமிடங்கள் வரை உரையாற்றியதுடன், தனது உரையின் மஹிந்தவை விமர்சித்திருந்தார்.

சம்பந்தன் உரையாற்றும் போது சபைக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வந்தார். மஹிந்த வருவதை அவதானித்த சம்பந்தன் அவரின் பக்கமாக திரும்பி நின்று அவரைப் பார்த்து உரையாற்றினார்.
மஹிந்த தொடர்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த மஹிந்த, கூட்டு எதிர்க்கட்சியினரை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இதில், சம்பந்தன் மஹிந்தவிடம் நேரடியாகவே புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
சம்பந்தனின் உரையை அடுத்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ “சம்பந்தனின் உணர்வு பூர்வமான உரையை நான் புரிந்து கொள்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தன் உரையைத் தொடர்ந்தார்.
சம்பந்தன் கடுமையாக விமர்சித்ததை சிரித்துக்கொண்டே ரசித்து கேட்ட மஹிந்த - Reviewed by Author on November 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.