அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்: இருண்ட யுகத்திற்குள் மனைவி -


பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் மனைவி தனது கவலையை அந்நாட்டு ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார்.பிரித்தானியாவின் Wembley பகுதியில் மொஹமட் ரஹீட் என்ற இலங்கையர், கடந்த செப்டெம்பர் மாதம் இருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அந்நாட்டு சட்டங்களை மிகவும் மதிக்கும் குடிமகனான மொஹமட் ரஹீட் தனது 51வது பிறந்த நாளுக்கு 9 நாட்கள் இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டார்.

Windsor town centre பகுதியில் இரண்டு நபர்களின் தாக்குதல்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த செம்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் Goswell Hill பகுதி காயமடைந்த நிலையில் காணப்பட்ட இலங்கையர், Oxford பகுதியிலுள்ள John Radcliffe வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவரது தலையில் பாரிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கையர் உயிரிழந்த பின்னர் செப்டெம்பர் 12ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்தனர். குறித்த இருவரும் மூன்று மாத விளக்கமறியலின் பின்னர் அடுத்த மாதம் 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் மொஹமட் ரஹீட்டின் மனைவி பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார். பெருமைக்குரிய இலங்கையரான எனது கணவர் உயிரிழந்த நாள் முதல் இன்று வரை ஒரு ஆழமான இருண்ட வலி தனக்குள் ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். என் கணவர் ரஹீட் குழந்தை பருவ நண்பர், அவர் தனது 51 வது பிறந்தநாளுக்கு 9 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

அவர் ஒன்பது ஆண்டுகளாக Wembleyயில் வசித்து வந்த ஒரு பெருமைக்குரிய இலங்கையராகும். அத்துடன் கடின உழைப்புடன் சட்டத்தை மதிக்கும் குடிமகனாகும். அவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். அவர் குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அந்நியர்கள் உட்பட அவர் சந்திக்கும் அனைவருக்கும் அவர் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இரண்டு மாதங்கள் மெழுகுவர்த்திகள் எரியும் இடத்தில் ரஹீட்டுக்கு ஒரு நினைவிடம் உள்ளது.


நான் என் நண்பர்களின் உதவியுடன் வாரத்திற்கு இரண்டு முறை Windsor பகுதிக்கு செல்கின்றேன். இங்குதான் ரஹீட் தனது கடைசி நிமிடங்களை கழித்தார். எனினும் 3 அற்புதமான பிள்ளைகளை அவர் என்னிடம் விட்டுச் சென்றுள்ளார். இஷானை இழந்த தாக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. எங்கள் வாழ்க்கை எப்போதோ மாறிவிட்டது, நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு நொடிக்கும் இஷாமை இழக்கின்றேன். அது என்னை உள்ளே எரிக்கிறது . என்னுள் ஒரு ஆழமான இருண்ட வலியை ஏற்படுத்தியுள்ளது என மொஹமட் ரஹீட்டின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்: இருண்ட யுகத்திற்குள் மனைவி - Reviewed by Author on November 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.