அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெய்த மழையினால் விவசாயிகள் முகத்தில் புன்னகை.... நகரப்பகுதியினர் முகத்தில் கடுகடுப்பு...

முகத்தில் புன்னகை தெரிகிறது ஆனால் நகரப்பகுதியினர் முகத்தில் கடுகடுப்பு தெரிகிறது.

 காரணம் புதிதாக அபிவிருத்திப்பணியின் மூலம் கொங்றீற் பாதை வந்ததாலும் சில கால்வாய்கள் சரியான முறையில் சீரமைக்கமுடியாமலும் வெள்ள நீர் வடிந்தோடாமல் தேங்கி நிற்கின்றது.
  • தண்ணீர் ஓடுகின்ற கால்வாய்களிலும் தரவைகளிலும் வீட்டுத்திட்ட வீடுகளின் வரவாலும்  
  • சிலர் தமது சொந்தப்பாவனைக்கு தேவையான மணல் கல் மற்றும் ஏனைய தின்மப்பொருட்களையும் கழிவுப்பொருட்களையும் வீதிகளிலும் கால்வாய் ஓரங்களிலும் குவித்து வைத்துள்ளனர்

 இதனாலும் தண்ணீர்  தேங்கி நிற்கின்றது வீடுகளிற்கும் அலுவலகங்களிற்கும் பொது இடங்களிற்கும் தண்ணீர் உட்புகுந்துள்ளது இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
சிலரின் முறையற்ற செயலாலும் வடிகால் வசதி உரிய முறையில் பேணப்படாமையினாலும் முகத்தில் கடுகடுப்பு தெரிகிறது.

  • விவசாயிகள் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த வருடம் வறட்ட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை மழையானது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

 உண்மைதான் ஆனாலும் மழைவீழ்ச்சி குறைவாகத்தன் இருப்பதாகவும் நகரப்பகுதியில் பெய்யும் மழை விவசாய நிலங்கள் உள்ள கிராமப்புறத்தில்  பெய்தால் இன்னும் மகிழ்ச்சி தான் என்று தனது ஆசையை வெளியிட்டார் விவசாயி ஒருவர் எது எப்படியோ கடந்த வருடத்தினை விட இவ்வருடம் பரவாயில்லை குளங்கள் ஓரளவு நீர் உள்ளது.  கால்நடைகளுக்கும் மகிழ்ச்சிதான் இனிவரும் தினங்கள் மழை அதிகமானால் .....???????? வயல் நிலங்கள்
இவ்வருட  இறுதிக்குள் சுனாமி வரும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது விஞ்ஞான உலகம்
எதுவும் அளவோடு இருந்தால் தான் பயன்....
பொறுத்திருந்த பார்ப்போம்

+மன்னார் விழி -
 











மன்னாரில் பெய்த மழையினால் விவசாயிகள் முகத்தில் புன்னகை.... நகரப்பகுதியினர் முகத்தில் கடுகடுப்பு... Reviewed by Author on November 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.