அண்மைய செய்திகள்

recent
-

விம்பம் பகுதியில் மறைந்தும் மறையாத மாணிக்கம்.......அ.லூக்காஸ் (யோகராஜ)


அடைக்கலம் லூக்காஸ் (யோகராஜ) செல்லன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிற்பி அவர்களின் வாழ்வியல் பார்வை உங்களுக்காக
மன்னாரின் கடல் வளம் சிறந்து மனிதவளம் செழிப்புற்று விளங்கும் நல்லூராம் விடத்தல் தீவில் 1947-08-23 திரேசம்மா பிலிப்பு அடைக்கலம் என்பவர்களின் ஏழு பிள்ளைகளில் இரண்டாவதாக பிறந்தார்.

இவருடன் இவரது சகோதரர்களும் பரம்பரையாக கலையார்வத்துடன்
  • பாடல் இயற்றுதல் 
  • நாடகம் எழுதுதல் 
  • ஆற்றுகை செய்தல்
  •  சிற்பவேலைப்பாடுகள் 
செய்தல் மூலம் கலைப்பணியாற்றியுள்ளார்.

இவரின்  திருமணவாழ்வு---
1970-05-20 நாளில் அந்தோனியாப்பிள்ளை என்பவரை அடம்பன் புனித வியாகுலமாதா ஆலயத்தில் வைத்து மணமுடித்தார் சந்தோஷமான வாழ்வின் வெளிப்பாடாய் ஆறு பிள்ளைகள் உள்ளனர்

1994-1998 முதல் கலைப்பயணத்தில்---
  • திருந்திய உள்ளம்
  • மீனாட்சி திருமணம்
  • வள்ளி திருமணம்
காத்தவராயன் கூத்து ஆகிய நாடகங்களை எழுதி சாளம்பன் தேவன்பிட்டி இலுப்பக்கடவை பெரியமடு தட்சனாமருதமடு போன்ற கிராமங்களில்  புதிய கலைஞர்களுக்கு பழக்கி மேடையேற்றியமை.

இவரின் கைவண்ணத்தில் சில
  • சிற்பம்-1994ம் ஆண்டு தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலயத்தில் உள்ள புனித சவேரியார் மரச்சிலையினை செதுக்கியுள்ளார்.
  • மரச்செதுக்கல்-ஜோசப்வாஸ் நகரில் உள்ள இருவீடுகளில்  இயேசுவின் இராப்போசனம் நிகழ்வு அப்பம் பிட்கும் காட்சிகளை மிகவும் தத்துரூபமாக வேப்பம் பலகையில் செதுக்கி கொடுத்துள்ளார்.
  • சிற்பம்- விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் புனித யாகப்பர் திருச்சுருவம் செதுக்கியமை
  • வள்ளுவர் சிலை அமைத்தல் -பொதுநூலகம் மன்னார்
  • ஆறுமுகநாவலர் சிலை அமைத்தல் -மன்.சித்திவிநயாயகர் இந்துக்கல்லூரி
குறிப்பு- மேலே குறிப்பிட்டவை தற்போது உள்ள சிலைகள் புதிதாய் அமைத்துள்ளனர்.

இவரின் சேவைகளினை பாராட்டி பொன்னாடை போர்த்தியும் பொற்கிளியும் வழங்கியுள்ளனர் இவரது ஏனைய ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை இடம்பெயர்வுகளால் தொலைந்துபோனதுடன் பத்திரப்படுத்தவும் இல்லை….

ஜோசப்வாஸ் நகர் தனது வீட்டில் புனித அந்தோனியார் திருச்சுருபம் கடைசியாக செய்த சிலையாகும்  44 ஆண்டுகளாக கலைச்சேவையாற்றி  சிற்பம் இயல் இசை நாடகம் என்பவற்றில் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றி 24-07-2017 அன்று தமது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார்
மறைந்தாலும் மறையாமல் தன்னுடைய கலையினால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.

  நியூமன்னார் இணையத்தின் தேடல் தொடரும் கலைஞர்களின் முகம் மலரும்… 

நியூமன்னார் இணையத்தின் தேடல் தொடரும் கலைஞர்களின் முகம் மலரும்........

தொகுப்பு-வை-கஜேந்திரன்









விம்பம் பகுதியில் மறைந்தும் மறையாத மாணிக்கம்.......அ.லூக்காஸ் (யோகராஜ) Reviewed by Author on December 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.