அண்மைய செய்திகள்

recent
-

அகதிகளை திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியது! அசாம் ரைபல்ஸ் அறிவிப்பு -


இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்துள்ள 1600க்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகளை அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அசாம் ரைபல்ஸ் படையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் இராணுவம் மற்றும் அராக்கன் ஆயுதக் குழுவிடையே வெடித்த வன்முறை, எட்டு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகளின் இடப்பெயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.2017ஆம் ஆண்டின் மிகப்பெரிய இடப்பெயர்வாவும் இது அடையாளப்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், ஆயுதக் கிளிர்ச்சிக் குழுவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மியான்மரின் எல்லையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தெற்கு மிசோரமில் கடந்த நவம்பர் 25ஆம் திகதி முதல் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வன்முறைக் காரணமாக பெருமளவிலான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்மடைந்திருக்கும் சூழலில், மிசோரமில் தஞ்சமடைந்துள்ள அகதிகள் புத்த மற்றும் கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களே தற்பொழுது திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மியான்மரின் எல்லையோர மாநிலமான சின் பகுதியைச் சேர்ந்த இவர்கள், ஜாகாய் (Zakhai), மியூ குமி (Miu Khumi) பழங்குடியினர் எனத் தெரிய வந்துள்ளது.அகதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் விதமாக ஜோச்சாசூ (Zochachhuah), ஹமாவங்புச்சூ (Hmawngbuchhuah), லைதலாங் (Laitlang) மற்றும் டும்ஜயூடலாங்( Dumzautlang) உள்ளிட்ட எல்லையோரக் கிராமங்களில் அசாம் ரைபல்ஸ் படையினர்

அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது, மியான்மரில் நிலைமை சுமூகம் அடைந்துள்ளதால் இந்த அகதிகளை திருப்பி அனுப்பும் பணி நடப்பதாகக் கூறப்படுகின்றது.ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளைப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கூறும் இந்திய அரசு, அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.


அகதிகளை திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியது! அசாம் ரைபல்ஸ் அறிவிப்பு - Reviewed by Author on December 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.