அண்மைய செய்திகள்

recent
-

பெயர் மட்டும் தான் பிட்காயின்: ஆனால்..?


இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் பிட்காயின் என்றால் என்ன, இதை வைத்து என்ன செய்ய முடியும், இது எங்கிருந்து வந்தது, இதனை கண்டறிந்தது யார்,...?

இணையம் மற்றும் வணிக செய்திகளில் பிட்காயின் (Bitcoin) எனும் கள்ளப்பணம் ஸ்பாட் லைட் பெற்றிருக்கிறது. பொதுவாக பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் எனலாம். ஆனால் இதனை கொண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்களை வாங்கவோ, இதர சேவைகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

பிட்காயின் என்பது கள்ளச் சந்தையில் பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட பணம் ஆகும். இதனை கண்டறிந்தவர் மற்றும் அவரது பின்புலம் இதுவரை யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 16,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,31,728 வரை உயர்ந்ததே, பிட்காயின் திடீர் டிரென்ட் ஆக காரணமாக அமைந்துள்ளது.

பிட்கியான் குறித்து பலருக்கும் புழங்கி வரும் பதில் தெரியா கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து பார்ப்போம்..,

இணையத்தில் மொத்தம் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டும் புழக்கத்திற்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றது. எனினும் இத்தகைய பிடிகாயின்களை விநியோகம் செய்ய 2140 ஆண்டு வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் இணையத்தில் மொத்தம் 1.67 கோடி பிட்காயின்கள் புழக்கத்திற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் சுமார் 12.5 புதிய பிட்காயின்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பிட்காயின்களை பெறும் வழிமுறையை மைனிங் (Mining) என அழைக்கின்றனர். பிட்காயின்களை சம்பாதிக்க சர்வதேச குழுக்கள் அடங்கிய அதிக சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்கள் போட்டியியிட்டு மிகவும் கடினமான வழிமுறைகளை தீர்க்க வேண்டும்.

இதுபோன்ற மைனிங் செய்ய கம்ப்யூட்டர்கள் அதிகப்படியான திறன் பெற்றிருக்க வேண்டும். பிட்காயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த சந்தையில் தினமும் பல்வேறு புதிய மைனர்கள் களமிறங்குகின்றனர். சமீபத்திய தகவலின் படி ஒற்றை பிட்காயின் சம்பாதிக்க அதிகபட்சம் 215 கிலோவாட் மின்சாரம் தேவைப்படும். இந்த வகையில் 3,00,000 பிட்காயின் பரிமாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க வீடுகளில் ஒரு வாரம் பயன்படுத்தப்படும் மின்சாரம் தேவைப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.



கள்ளச்சந்தையில் இணைய பரிமாற்றங்களின் போது இதுவரை 9,80,000 பிட்காயின்கள் ஹேக்கர்கள் மற்றும் பல்வேறு திருடர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 1500 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடிகளை (967245000000) தொடுகிறது.

பிட்காயின்களை உருவாக்கியவரை கண்டறிய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை பலன் அளிக்கவில்லை. எனினும் சடோஷி நகமோட்டோ என்பவர் தான் பிட்காயின்களை கண்டறிந்தார் என கூறப்படுகிறது. என்றாலும் இவர் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் உள்ளிட்ட எந்த கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலதிபரான க்ரியாக் ரைட், பிட்காயின் சமூக உறுப்பினர்கள் என சிலரை தான் கண்டறிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அதன்படி மே, 2016-இல் க்ரியாக் ரைட் வெளியிட்ட தகவல்களின் படி நகமோட்டோ பிட்காயின்களை உருவாக்கினர் என்றும், பிட்காயின் சமூகத்தவர் பலரும் இந்த பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இவை எதற்கும் க்ரியாக் ஆதாரங்களை வெளியிடவில்லை.

இதுவரை வெளியாகியுள்ள பிட்காயின்களின் மதிப்பு 28.3 கோடி அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு விசா, பிளாக்ராக் மற்றும் சிட்டிக்ரூப் நிறுவனங்கள் இணைந்தும் இருமடங்கு வரை அதிகம் ஆகும். இணைய கள்ளச் சந்தையில் பிட்காயின் மட்டுமின்றி 1000க்கும் அதிகமான கள்ளப்பணம் புழக்கத்தில் உள்ளது.

சான் டெய்கோ மற்றும் ஜார்ஜ் மசோன் பல்கலைக்கழகங்கள் இணைந்து 2013, டிசம்பரில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் புழக்கத்தில் உள்ள 1.2 கோடி பிட்காயின்களில் 64 சதவிகிதம் வரை பயன்படுத்தாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் பயன்படுத்தாமல் இருக்கும் 10 லட்சம் பிட்காயின்கள், இதுவரை மர்மமாக இருக்கும் பிட்காயின் உருவாக்கியவருக்கு சொந்தமானது என பிட்காயின் டெவலப்பர் செர்கோ லெர்னர் கணித்துள்ளார்.



பெயர் மட்டும் தான் பிட்காயின்: ஆனால்..? Reviewed by Author on December 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.