அண்மைய செய்திகள்

recent
-

இறந்தவர் வீட்டில் எத்தனை நாளைக்கு சுபகாரியங்கள் செய்யக் கூடாது? -


இறந்தவர்களின் வீட்டில் ஒரு வருடம் வரை வீட்டில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கூடாது.
ஆனால் இறந்தவர் உயிருடன் இருக்கும் போது செய்யப்பட்ட நிச்சயதார்த்தத்திற்கு உரிய திருமணங்களை குறிப்பிட்ட திகதியில் செய்யலாம்.
அதிலும் இறந்த 15 நாட்களுக்குள் வந்தால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வேறு நாளுக்குத் தான் தள்ளி வைக்க வேண்டும்.
வீட்டில் வயதிற்கு வந்த பெண் திருமணத்திற்காக காத்திருக்கும் பட்சத்தில் இறந்தவர் வீட்டில் பெண்ணின் திருமணத்தை ஒரு வருடத்திற்குள் நடத்துவதை சாஸ்திரம் அனுமதிக்கிறது.
அதேபோல, இறந்தவரின் மகனுக்கு தலைதிவசம் வருவதற்குள் திருமணம் செய்துகொள்ளும் அதிகாரமும் உள்ளது.
இதுபோன்ற அவசியம் செய்தாக வேண்டும் என்ற நிகழ்வுகளைத் தவிர, இதர சுப நிகழ்ச்சிகளான குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல், கிரஹப்ரவேசம் செய்தல் ஆகிய சுப காரியங்களை தலைதிவசம் முடிந்த பின் தான் செய்ய வேண்டும்.
கோவிலுக்கு எத்தனை நாள் கழித்துச் செல்ல வேண்டும்?
இறந்தவரின் வீட்டில் உள்ளவர்கள் 15 நாட்கள் கழித்து கோவிலுக்குச் செல்லலாம்.
ஆனால் கர்மா செய்த பிள்ளை மட்டும் ஒரு வருட காலத்திற்கு கோவிலுக்குள் கொடிகம்பத்தினைக் கடந்து உள்ளே செல்லக் கூடாது.
த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிக்கம்பம் இல்லாத, பிரஹ்மோற்சவம் நடைபெறாத கோவிலுக்குள் இறந்தவரின் மகன் 15 நாட்கள் கழித்து சென்று வரலாம்.
இறந்தவர் வீட்டில் எத்தனை நாளைக்கு சுபகாரியங்கள் செய்யக் கூடாது? - Reviewed by Author on December 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.