அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதா மரண விசாரணை: அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள மருத்துவர் பாலாஜி! -


ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கெனவே தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் ஜெயலலிதா வைத்த கைரேகை பற்றி வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த கைரேகைக்கு சான்றொப்பம் இட்டார் டாக்டர் பாலாஜி.
பரபரப்பாக நடக்கும் இந்த நிலையில் விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார்.
உயர் நீதிமன்றத்தில் ஆஜரான போது, ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக தெரிவித்தவர், விசாரணை கமிஷன் முன்னிலையில் அவரை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்,
'அவருக்கு, நான் சிகிச்சை அளிக்கவில்லை, ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும்தான் சிகிச்சை அளித்தனர்' என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் என்ன நிலையில் இருந்தார் என்பதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் டாக்டர் பாலாஜி அளித்துள்ள விளக்கம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, `ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் சங்கர் வருகின்ற 12-ம் தேதியும், தீபக்.14-ம் தேதியும், மாதவன் 15-ம் தேதியும், டாக்டர் மகேந்திரன் 19-ம் தேதியிலும் ஆஜராக உள்ளனர்.
தமிழக அரசின் முன்னாள் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ம் தேதியும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் 21-ம் தேதியும்ஆ ஆஜராகவும் சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை ஆணையம்.
மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் நடவடிக்கை.

புதிய இணைப்பு
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் தினமும் போய் பார்த்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான டாக்டர் பாலாஜி கூறியுள்ளார்.
தான் தமிழக அரசு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், சிகிச்சைக்கு வந்த லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்து சென்றதாக கூறினார்.
தினமும் ஜெயலலிதா அறைக்கு சசிகலா மட்டும் தான் செல்வார். எழுந்தவுடனேயே அவர் சசிகலாவை தான் அழைப்பார் என்றும் பாலாஜி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சார்பில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த டாக்டர்கள் குழுவிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
அரசு சார்பில் இடம்பெற்றிருந்த சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர் விமலா, அரசு மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ ஆகியோர் இதுவரை விளக்கமளித்துள்ளனர்.

இதுவரை ஆஜரான டாக்டர்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என்றே தெரிவித்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவு அருகே ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அந்த அறையில் தான் அமர்ந்து இருந்தோம் என்றும், அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி கூட கிடையாது என்று விசாரணையில் கூறினர்.
ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து செல்லும் போது கூட ஸ்கிரீன் போட்டு மூடியே ஸ்டெக்சரில் கொண்டு சென்றனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டாக்டர் பாலாஜி நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தானும், சசிகலாவும் தினசரியும் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார்.
அவர் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கும் போது சுயநினைவுடன் இருந்ததாகவும், சசிகலா உடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தான் தமிழக அரசு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், சிகிச்சைக்கு வந்த லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்து சென்றதாக கூறினார். ஜெயலலிதாவை நான் தினமும் போய் பார்த்தேன் என்றும் கூறியுள்ளாார்.
லண்டன் டாக்டர் சிகிச்சை அளிக்க வந்திருந்தார். அப்போது, அவர் ஜெயலலிதாவிடம் சிகிச்சைக்கு லண்டன் வருமாறு அழைத்ததாகவும், அங்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைப்பதாகவும் கூறினார். ஆனால், ஜெயலலிதா லண்டன் வர மறுத்துவிட்டதாக பாலாஜி தெரிவித்தார்.
தினமும் ஜெயலலிதா அறைக்கு சசிகலா மட்டும் தான் செல்வார். எழுந்தவுடனேயே அவர் சசிகலாவை தான் அழைப்பார் என்றும் பாலாஜி தெரிவித்தார்.

டிசம்பர் 2ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவரை தான் எனக்கு தெரியும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் பாலாஜி மீண்டும் 27ஆம் தேதியன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு அரசு மருத்துவரான தர்மராஜனும் விசாரணை கமிஷன் முன்பு விளக்கமளித்தார்.
ஜெயலலிதா மரண விசாரணை: அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள மருத்துவர் பாலாஜி! - Reviewed by Author on December 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.