அண்மைய செய்திகள்

recent
-

மன்/ தட்சனாமருதமடு மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது


மடு கல்வி வலயத்தை சேர்ந்த மன்/தட்சனாமருதமடு மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழா, ஔி விழா, தட்சணா தீபம் நூல் வெளியீட்டு விழா ஆகிய மூன்று  விழாக்களும் ஒருங்கே 07/12/2017 ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரி அதிபர் மரியாதைக்குரிய
திரு. A. ஜெரால்ட் அல்மேடா அவர்களின் சிறப்பான நெறியாளுகையின் கீழ் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவிற்கு

பிரதம விருந்தினராக

வடமாகாண சுகாதார அமைச்சர்
கௌரவ வைத்திய கலாநிதி
ஜி. குணசீலன் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக

மடு பிரதேச செயலாளர்
திரு.F.C. சத்திய சோதி அவர்களும்
மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்
திருவாளர்.S.R.யதீஸ் அவர்களும் அவர்தம் பாரியார் அவர்களும்

தட்சனாமருதமடு பங்குத்தந்தை அவர்களும்

தட்சனாமருதமடு இந்துமத குருக்கள் அவர்களும்

மடு கோட்டக் கல்வில்விப் பணிப்பாளர் திரு. S.R.கூரேதாஸ் அவர்களும்
இவர்களுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களினதும் நூறு வீத பங்களிப்புடன் பாடசாலை நலன்விரும்பிகள் என அரங்கமே நிறைந்து வழிய மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இதில் சாதனையாளர் கௌரவிப்பின் போது
  • 2017 இல் மாகாண மட்டத்தில் விளையாட்டில் 3 தங்கம் வென்ற ஒரே மாணவி பா.பிரியங்காவும்

  •  2017 இல் தேசிய மட்டத்தில் புத்தாக்கத்தில் தங்கம், வெண்கலம் வென்ற இரு மாணவர்களும் சித்திரப்போட்டியில் தங்கம் வென்ற மாணவரும்

  •  தட்சனாமருதமடு மகா வித்தியாலயத்தில் A/L உருவாகியபோது கலைப்பிரிவு கற்று முதன்முதலாக பல்கலைக்கழகம் தெரிவான 4 மாணவ சாதனையாளர்களும்

  • 2017 இல் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100% வீத சித்தியை நியமாக்கிய சாதனையாளர்களும்
இந்த சாதனையாளர்களை உருவாக்கிய ஆசிரியர் பெருந்தகைகளும்

  • 2017 இல் சிறந்த திறமைமிக்க ஆசிரியராக கல்வி அமைச்சினால் "குரு பிரதீபா பிரபா" விருதுபெற்ற 3 ஆசிரியர்களும்
மிக மிக உணர்வுபூர்வமாக கௌரவிக்கப்பட்டார்கள்

இந்த சாதனையாளர்களுக்கு பாடசாலைச்சமூகத்தின் ஏற்பாட்டில் பொன்னாடை போர்த்தி கௌரவம் நிறைந்த ஞாபக சின்னம் வழங்கப்பட்டது அத்துடன்

மன்னார் மாவட்ட மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளர் திருவாளர்.S.R.யதீஸ் அவர்களினால்
சாதனை படைத்த

  •  மாணவர்கள் "சாதனைச் சூரியன்" எனவும்
  • ஆசிரயர்கள் "சாதித்த சூரியன்" எனவும்
  • இவற்றை இவர்கள் நிகழ்த்த காரணமான அதிபர்
"கௌரவச் சூரியன்" என கௌரவ விருது வழங்கி ஒவ்வொரு சாதனைக்கும் தனித்தனியாக வீரம் செறிந்த கவிதை வாசிக்கப்பட்டு அதை தாங்கிய சட்டகம் (பிறேம்) ஒன்று வழங்கப்பட்டது

அத்துடன் கல்லூரி அதிபர் A.ஜெரால்ட் அல்மேடா அவர்களினால் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் "சாதனை முழக்கம" என்பதை முதன் முதலில் இறை ஆசிகளுடன் வாசித்து ஆரம்பித்து வைத்ததுடன் அந்த பிரகடனத்தை உத்தியோக பூர்வமாக திருவாளர்.S.R.யதீஸ் அவர்களிடம் மங்களகரமாக ஒப்படைத்து அது மாணவர் சாதனைக்கு ஸல்யூட்டாக (Salute) சமர்ப்பணம் செய்யப்பட்டது.
அத்துடன் மடு பிரதேச செயலாளர் திரு F.C.சத்திய சோதி அவர்களினால் மீண்டும் ஒரு முறை வாசிக்கப்பட்டும்

வட மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி ஜி.குணசீலன் அவர்களினால் அவைக்கு உயர்த்திக் காட்டப்பட்டு வீரமும் புகழ்ச்சியும் நிறைந்த சாதனை விருதாக சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மகத்துவமான தங்கம் வென்று எமது மன்னார் மாவட்டத்தை பெருமை கொள்ளச் செய்த மன/தட்சனாமருதமடு மகா வித்தியலயத்தின் சாதனையாளர்களை நியுமன்னார் இணைய குழுமம் சிறப்பாக வாழ்தி நிற்கின்றோம்.
































மன்/ தட்சனாமருதமடு மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது Reviewed by Author on December 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.