அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் மீண்டும் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள்


வவுனியாவில் பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த புதிய மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

195 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த 16 ஜனவரி 2017 வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
13 பேருந்துகள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும், 21 பேருந்துகள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடத்தக்க வகையில் ஏ9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் 100 பேருந்துகள் வந்து செல்லத்தக்க வகையில் நவீன முறையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், மோதல்கள் காரணமாக புதிய மத்திய பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

25ம் திகதி (இன்று) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச சேவைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ள நிலையிலேயே இன்று (25.12.2017) தனியார் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுகின்றன.

எனினும் இ.போ.ச பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து பழைய பேரூந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுகின்றன.

புதிய பேரூந்து நிலையத்தின் அனைத்து பாதாதைகளும் தேசிய போக்குவரத்து கமிஷன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச சேவைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ள நிலையில் இதற்கு தடையாக அரசியல்வாதிகள் எவராவது தடையாக இருப்பார்களேயானால் உணவு தவிர்ப்பில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



வவுனியாவில் மீண்டும் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் Reviewed by Author on December 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.