அண்மைய செய்திகள்

recent
-

யாழ் தனியார் வைத்தியசாலையின் 03சத்திர சிகிச்சை கூடங்களிலும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது- வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்


யாழ் தனியார் வைத்தியசாலையின் மூன்று சத்திர சிகிச்சை கூடங்களிலும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது-அறிவூறுத்தல்களை கடைப்பிடிக்கவும்-
வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

-யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த வருடம் கண் சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட பலர் பாதீப்புக்களை எதிர் கொண்டிருந்தனர்.

-இந்த நிலையில் குறித்த பாதீப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து இன்று புதன் கிழமை(17)  ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கண் சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட நோயளிகள் சத்திர சிகிச்சையின் பின் பலருக்கு நோய்த்தொற்றுகைக்கு உற்பட்டு சடுதியாக சிக்கலான நிலையை அடைந்தது.

-சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட பலர் பார்வையினை இழந்ததுடன்,குறிப்பிட்ட சிலருக்கு கண் விளிக்கோலத்தினை வெளியில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

-குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களத்தினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

-உடனடியாக எமது திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ அறிவித்தலை குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு வழங்கி அதனை கடைப்பிடிக்குமாறு அறிவூறுத்தல் வழங்கினோம்.

-ஆனால் குறித்த வைத்தியசாலையின் ஒத்துழைப்பு எங்களுக்கு பூரணமாக கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

மேலதிகமாக சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லக்கூடிய  வகையில் தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்துகின்ற சட்டங்கள் பலமில்லாத நிலையில் இருந்ததினால் நாங்கள் சில அலோசனைகளையும், அறிவுறுத்தல்களை மட்டும் எமது திணைக்களத்தினால் வழங்கி இருந்தோம்.

-ஆனால் எந்த அளவுக்கு ஒத்துழைக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

-அதன் பின்னர் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுனத்துவக்குழுவினர் வந்து குறித்த தனியார் வைத்தியசாலையில் விசாரனைகளை மேற்கொண்டிருந்தது.

பல்வேறு மாதிரிகளை சேகரித்து அறிக்கைகளையும் சமர்ப்பிக்க முயற்சித்திருந்தது.

-குறித்த அறிக்கை தற்போது எமக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையினுடைய  தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை தன்னுடைய விசாரனையின் பின்னர் தமது விசாரனை தொடர்பான விளக்கங்களையும், நடந்தவை சம்பந்தமான சிபாரிசுகளையும் எங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

-இவ்விடையம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எங்களுக்கு அறிவித்துள்ளனர்.
-கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

-குறித்த சம்பவம் தொடர்பில் பாதீக்கப்பட்டவர்கள் ஊடகங்களுடாக கேள்வி எழுப்பியுள்ளனர்.பத்திரிக்கையாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-குறித்த அறிக்கையின் படி குறித்த தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை கூடத்தில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-அறுவைச்சிகிச்சை கூடத்தினுள் காணப்படுகின்ற வளியினுடைய நோய்க்கிருமிகள் அற்ற  தன்மை, அங்கு பாவிக்கப்படுகின்ற உபகரணங்கள் சிலவற்றினுடைய நோய்க்கிருமிகள் அற்ற தன்மை,அங்கே கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களினுடைய தகுதிகள் அல்லது பயிற்சிகள் இல்லாத குறைபாடுகள்,காலத்துக்கு காலம் செய்யப்பட வேண்டிய நுன்னியல் நிபுனருடைய ஆலோசனையை பெற்று அறுவைச்சிகிச்சை கூடங்களை தகுந்த முறையில் நோய்த்தொற்றுகை இல்லாமல் வைத்திருக்க வேண்டிய முறை அங்கே கடைப்பிடிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையினுடைய சிபாரிசை கூறுவதாக இருந்தால் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் சீர் செய்யப்படும் வரைக்கும் குறித்த வைத்தியசாலையினுடைய அறுவைச்சிகிச்சை கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என அறிவித்துள்ளனர்.

-அத்துடன் அங்கு கடமையாற்றுகின்றவர்கள் சரியான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு குறித்த சத்திர சிகிச்சை கூடத்தினுள் நோய்த்தொற்றுகை ஏற்படாமல் சிறந்த முறையில் பேனுவதற்கு நுன்னியல் நிபுனர்களுடைய உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

-மேலும் பாதீப்புக்கு உள்ளான 10 நோயாளிகளுக்கும் நஸ்ட ஈட்டை அல்லது நிவாரணம் போன்ற சில விடையங்களை செய்ய வேண்டும். என்கின்ற முக்கியமான சிபாரிசுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

-ஆகவே அறிக்கையினுடைய சாரம்சம் குறித்த வைத்திய சாலையில் குறிப்பாக சத்திர சிகிச்சைக்கூடத்தில் குறைபாடுகள் காணப்பட்டுள்ளது. இப்போதும் இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

-தகுதி அற்றவர்கள் கூட அங்கே கடமையாற்றுகின்றனர்; என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்ய வேண்டிய விடையங்களையும் எங்களுக்கு ஆலோசனையாக வழங்கியுள்ளனர்.இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை நிர்வாகத்திற்கு குறித்த அறிக்கையுடன் சேர்த்து அறிவுறுத்தல்களை வழங்க இருக்கின்றோம்.

-குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செய்யப்பட்ட சிபாரிசுகளுக்கு அமைவாக வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு திருத்திக்கொண்டதன் பின்ரே வைத்திய சாலையினுடைய சத்திர சிகிச்சை கூடம் இயங்க விடலாம்.

அது வரைக்கும் குறித்த மூன்று சத்திர சிகிச்சைக்கூடங்களும் இயங்கக்கூடாது என நாங்கள் அறிவித்தல் வழங்குகின்றோம்.

ஏனைய சிபாரிசுகளையும் அவர்கள் செய்து முடிக்க வேண்டும்.எமது திணைக்களத்திற்கு வைத்தியசாலை நிர்வாகம் ஒத்துழைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காது விட்டால் குறித்த அறிக்கைக்கு அமைவாக நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக செல்வதை தவிர்க்க முடியாது.என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ் தனியார் வைத்தியசாலையின் 03சத்திர சிகிச்சை கூடங்களிலும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது- வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் Reviewed by Author on January 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.