அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில்.....கலாகரன் யசோதரன் அவர்களுடனான

மண்ணுக்கு நீண்ட காலத்திற்கு பின் 17வது இலங்கை இளைஞர்சேவைகள் கழக சம்மேளனத்தின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள மன்னார் பேசாலைக்கிராமத்தின் மைந்தன்
கலாகரன் யசோதரன் அவர்களுடனான சந்திப்பின் போது…..

தங்களைப்பற்றி
நான் கலாகரன் யசோதரன் எனது சொந்த இடமான கடலும்  கடல் சார்ந்த இடமான பேசாலைக்கிராமத்தில் எனது தந்தை கலாகரன ஜானகி கலாகரன
தாயுடன்  மிகவும் சந்தோசமாக இளைஞர் யுவதிகளின் அபிவிருத்திக்கு என்னாலான சேவையாற்றி வருகின்றேன்.

கல்வி செயற்பாடு பற்றி…..
ஆரம்பம் தொடக்கம் பாடசாலைக்கல்வி  மன்/பத்திமா.மத்திய மகாவித்தியாலயம் பேசாலையில் முடித்து விட்டு கிழக்கு மாகாண வாழ்க்கை தொழில் அதிகார சபையில்
  • ICT Diploma கற்கைநெறியை முடித்து விட்டு காட்டாஸ்பத்திரி திரிரோஸ் இளைஞர் கழகத்தில் 2005ம் ஆண்டு அக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு மன்னார் நகர இளைஞர் சம்மேளனத்திற்கு பிரதிநிதியாக அனுப்பப்பட்டு 2011-2012ம் ஆண்டுகளில் பிரதேச சம்மேளனம்-மாவட்ட சம்மேளனங்களில் அங்கத்தவராக இருந்து இளைஞர் கழக பயிற்சிகள் விழாக்களில் கலந்து கொண்டு இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டங்களிலும் இளைஞர் முகாம்கள் விளையாட்டு விழாக்கள் இளைஞர் தினம் போன்ற பல்வேறு இளைஞர் நிகழ்வுகளில் ஈடுபட்டு தலைமைத்தாங்கியும் பல நிகழ்வுகள் நடாத்தியமை.

இளைஞர்கழகத்தின் இணைந்து ஆரம்பகால செயற்பாடுகள் பற்றி----
  • 2013 ம் ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு இளைஞர்களின் பிரச்சனைகளை (மன்னார் மாவட்டம்) உலகரியச் செய்தமை. 2013 ம் ஆண்டு தகவல் மற்றும் ஊடக பிரிவு தலைவராகவும் மன்னார் மாவட்ட சம்மேளனத்தில் சேவையாற்றியமை.
  • 2014 ம் ஆண்டு மன்னார் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பை ஏற்று தனது தலைமையிலான சம்மேளனம் சிறப்பாக நடாத்தியமைக்காக மீண்டும் இளைஞர் யுவதிகளால் 
  • 2015 ம் ஆண்டும் அதே சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பேற்றமை.
  • மீண்டும் 
  • 2015 ம் ஆண்டு மன்னார் நகர இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு மன்னார் மாவட்ட சம்மேளனத்தின் தேசிய சம்மேளன உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டு தேசிய சம்மேளனம் சென்று அங்கு 11-06-2015 – 29-05-2016 வரை மத்திய ஒழுக்காற்று குழு அங்கத்தவராகவும் 30.05.2016 – 31.10.2017 வரை மத்திய கணக்காய்வு குழு அங்கத்தவராகவும் தேசிய சேவை ஆற்றியமை. 
  • 2016 -2017 ம் ஆண்டு நடைபெற்ற யொவுன் புர தேசிய நிகழ்வின் யொவுன் புர நகர சபைக்கு தெரிவாகி அச்சபையின் ஊடகத்துறை தலைவராகவும் சேவையாற்றியுள்ளேன்.
  • தேசிய சேவைக்கான நாடுகளுக்கிடையிலான இளைஞர் முகாம்கள் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டங்கள் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டமை.
  • வேல்விசன் லங்கா நிறுவனத்தில் 2012 – 2014 வரை சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தில் சேவையாற்றியமை.
  • சர்வோதய நிறுவனத்தில் 2013 – 2017 வரை சாந்திசேனா இயக்கத்தில் இளைஞர்களுக்கான பரிமாற்று வேலைத்திட்டம்.
  • USAID நிறுவனத்துடன் இணைந்து சமாதான நல்லிணக்க செயற்பாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டமை.
  • UN தொண்டராக இணைந்து பட்டவிழா மற்றும்
  • WEARE 2030.
  • Global Partnership Youth Programme – 2017. Srilanka  UNITED NATIONS FRIENDSHIP ORGANISATION (SUNFO)

 தாங்கள் பெற்ற விருதுகளும் பட்டங்களும்…..

  • Capacity bulding(2012)
  • Leadership development-(2011,2014)
  • Prevention & control of non communicable diseases-(2014)
  • Youth exchange program (2012)
  • Basic media skils-(2012) 
  • Ict diploma(2011) un volunteer-(2014)   
  • India srilanka youth exchange-(2015, 2017)
  • Younpura urban council(2016, 2017)
  • Sustainable development unic-(2016)
மன்னார் இளைஞர் யுவதிகளின் செயல்பாட்டில் தேசிய சம்மேளனத்தின் பங்களிப்பு என்ன---
  • விளையாட்டுக்களும் பயிற்சிகளும்
  • கல்வி கற்றல் செயற்பாடுகள்
  • தொழில் பயிற்சிகள்
  • தேசிய கலை நிகழ்வுகள்
  • தலைமைத்துவப்பயிற்சிகள்
மன்னாரில் உள்ள 13வயது தொடக்கம் 29வயதுக்கு உட்பட்ட அனைத்து இளைஞர்யுவதிகளையும் திருமணம் செய்திருந்தாலும்  அனைவரையும் பதிவு செய்தல் வேண்டும்
கலைத்துறையில் இசைத்துறையில் இலவசப்பயிற்சி இருக்கின்றது. முறையாக பதிவுபெற்று இளைஞர்யுவதிகள் இளைஞர்சம்மேளனத்துடன் இணைந்தால் இப்படியான பயிற்சிகள் இன்னும் ஏராளமான நன்மைகள் உள்ளது அவற்றினை பெற்று இளைஞர்கள் யுவதிகள் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

மன்னார் இளைஞர் யுவதிகளின் செயல்பாட்டில் தேசிய சம்மேளனத்தின் உபதலைவராக உங்களின் பங்களிப்பு என்ன---
  • மன்னாரில் பதிவு செய்யப்பட்ட 154 இளைஞர்கழகங்கள் உள்ளது அத்துடன் மன்னார் நகரப்பகுதிக்குள்  பதிவு செய்யப்பட்ட 62 கழகங்கள் எனது பிரிவுக்குள் வருகின்றது.
  • மன்னார் தேசிய சம்மேளனத்தின் கீழ் மாவட்டத்தின் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும்  ஒரு அபிவிருத்தி திட்டம் ருபா 75-000 செயற்பட்டு வந்துள்ளது அதை 150000 ருபாவாக உயர்த்த வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்துள்ளேன்.
  • வெளிநாட்டு இளைஞர் சுற்றுலா 04 பேர்  செல்வதற்கு  வாய்ப்பு இருந்தது அதை நான் 08 பேராக செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
இலங்கையின் இளைஞர் சம்மேளனத்தின் செயல்பாடுகள் பற்றி---
இலங்கையில் உள்ள அனைத்து இளைஞர்யுவதிகளையும்  ஒன்றினைத்து அவர்களின் திறமைகளையும் அறிவுத்திறனையும் மேம்படுத்துதல் அபிவிருத்தி செய்தல் தான் இதன் பிரதான செயற்பாடு இலங்கையின் எல்லாப்பாகத்திலும் சிறப்பாக நடைபெறுகின்றது.

வடமாகாணத்தினைப்பொறுத்தவரையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் இந்த மூன்று மாவட்டங்களும் சேர்ந்து வடக்கு மாகாணமாகவும் வவுனியா-மன்னார் வன்னியாகவும் பிரித்துள்ளனர் இவற்றினை ஒன்றிணைத்து வடக்கு மாகாணமாக இணைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

கடந்த காலங்களில் உங்களின் பங்களிப்பு என்ன—
2015ம் ஆண்டு நான் மன்னார் மாவட்ட தேசியசம்மேளனத்தின் உபதலைவராக இருந்தபோது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது ஒரு மாகாணத்தில் இருந்து 02பேர் வீதம் மாண்புமிகு பிரதமர் ரணில்விக்ரமசிங்க அவர்களிடம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை பேசலாம் அச்சந்தர்ப்பத்தில் நான் எனது மாவட்டத்தில் உள்ள இரண்டு பிரச்சினைகளை முன்வைத்தேன்.

 இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் உள்ள இளைஞர் கட்டிடத்தினை விடுவித்தல் செய்தல் அத்தோடு கடல் சார்ந்துள்ள இளைஞர்களுக்கான தொழில்பயிற்சி வழங்க வேண்டும் என்பதுதான் அவ்வாறே கடல்சார்ந்த பிரதேசங்களான பேசாலை விடத்தல்தீவு வங்காலை இளைஞர்களுக்கான தொழில்பயிற்சியும் ரின்மீன் உற்பத்தி மீன்வளர்ப்பு போன்றவற்றை செய்வதாக கூறியதுடன் அவ்வாறே செய்தார்.
  • மன்னார் சர்வோதயத்தின்  பிரதேச இணைப்பாளர்
  • மன்னார் சர்வோதயத்தின்  சாந்திசேன அமைப்பின் உறுப்பினர்
  • Change For Community for Development அமைப்பின் இயக்குனரும் செயலாளரும்.
  • மன்னாருக்கான உதயன் பத்திரிகை விநியோகஸ்தர்
  • மன்.பததிமா மகாவித்தியாலயத்தின் பழையமாணவர் சங்க உறுப்பினர்.
  • 2018 ம் ஆண்டிற்கான மன்னார் மாவட்ட தேசிய சம்மேளன உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்டதோடு கடந்த கால சேவையின் பிரகாரம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவராக இந்த ஆண்டு பதவி ஏற்றுள்ளேன்.
மன்னார் மண்ணுக்கு நீண்ட காலத்திற்கு பின் 17வது இலங்கை இளைஞர்சேவைகள் கழக சம்மேளனத்தின் உபதலைவர் பதவி கிடைத்திருப்பது பற்றி.......
இவ்வாறான பதவிகள் கிடைப்பதற்கு நாங்கள் தகுதியுடையவர்களா எமது திறமையினை வெளிப்படுத்தியுள்ளோம். வெளிப்படுத்தியும் வருகின்றோம் தற்போது மன்னார் இளைஞர்யுவதிகள் மாணவர்கள் எல்லாத்துறைகலிலும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றார்கள் இனிவருங்காலத்தில் மன்னார் மாவட்டம் முன்னிலை வகிக்கும் எல்லா வற்றிலும் உபதலைவர் பதவி எனக்கு கிடைத்தது என்பதைவிட மன்னார் மாவட்டத்திற்கு கிடைத்தது என்பதே மகிழ்ச்சியான விடையம்.


மன்னார் மாவட்டத்தில் நியூமன்னார் இணையத்தின் செயற்பாடுகள் பற்றி---
ன்னார் மண்ணிற்கு என்று தனியாக இயங்கிக்கொண்டு இருக்கும் நியூமன்னார் இணையமானது மன்னாரில் உள்ள அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் வெளிப்படத்தியும் கலைஞர்களை ஒவ்வொரு துறைகளிலும் மிளிரும் ஒவ்வொருவரையும் வெளிக்கொணர்வது பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதும் அத்துடன் மன்னாரில் உள்ள ஏனைய ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அன்பாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் மன்னார் மாவட்டத்தின் நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் வெளிக்கொணரவேண்டும்.

 அத்துடன் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் இளைஞர்கள்யுவதிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் தேசிய சம்மேளனம் தொடர்பான விபரங்களை வெளிக்கொணரவேண்டும் என்பது எமது ஆசையும் வேண்டுகோளும் ஆகும்.

சந்திப்பு-வை.கஜேந்திரன்-
 








கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில்.....கலாகரன் யசோதரன் அவர்களுடனான Reviewed by Author on January 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.