அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் மாகாணசபை அமைச்சர் மீது தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு வேட்பாளர்கள் குற்றச்சாட்டு....!



முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளர் தொடர்பில் வவுனியா பண்டாரிகுளம் தொகுதியில் ஒழுங்கு செய்த கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக அக்கட்சியின் வேட்பாளர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் அமைச்சராக இருந்து பலகோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதால் முதலமைச்சரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட இந்த மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் தமது தோல்வியை, தமது பக்க திருட்டுக்களை மறைக்க இவ்வாறான போலி குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்து அநாதையாக நின்ற மக்களின் மீட்சிக்காக, அம்மக்களின் இரத்தத்தால் உருவான மாகாண சபையில் ஊழலில் ஈடுபட்டு தனது தமிழின விசுவாசத்தை காட்டியிருக்கிறார். இன்று மக்களின் முன் வந்து வாக்கு கேட்கிறார். இவருக்கு வெட்கமில்லையா?

அதுபோல் வவுனியாவிற்கு வந்த வர்த்தக மையத்தை ரிஷாட்டிடம் இலஞ்சப் பணம் வாங்கி அத்திட்டத்தை குழப்பி தென்பகுதிக்கு மாற்றியவரே இந்த மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம்.

இதுமட்டுமின்றி சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் சுகாதாரத் தொண்டர் நியமனத்தில் பல்வேறு மோசடிகளை செய்து உண்மையான தொண்டர்களுக்கு வழங்காது சிலரிடம் பணம் பெற்றும் நியமனம் வழங்கியவரும் இந்த மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கமே

அண்மையில் வவுனியா அரச பேரூந்துகளின் ஆர்ப்பாட்டம் மற்றும் பணிப்புறக்கணிப்பு என்பவற்றுக்கு பின்னால் ரிஷாட்டுடன் சேர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் தனியார் பேருந்துகளுக்கு எதிராகவும் அழுத்தம் கொடுத்தவரும் இந்த சத்தியலிங்கமே. அந்த பிரச்சனை தொடர்பில் நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுத்தவர் வவுனியா பண்டாரிகுளம் தொகுதியின் வேட்பாளர் சுமந்திரனின் மச்சான் ஆவார். எனினும் மக்களால் இவரின் முயற்சி தோல்வியடையச் செய்யப்பட்டது.

இதுமட்டுமின்றி தமிழ் மக்களின் நிழல் அரசாங்கம் எனப்பட்ட வடக்கு மாகாண சபையில் ஊழலில் ஈடுபட்டது மட்டுமன்றி முதலமைச்சருக்கு எதிராக தான் முதலமைச்சர் ஆகும் கனவுடன் ரிஷாட்டின் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், சிங்கள முஸ்லிம் உறுப்பினர்களுடன் இணைந்து ஆட்சிக் கவிழ்பை மேற்கொண்டவரும் இந்த சத்தியலிங்கமே. எனினும் மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கியதால் இவரின் ஆட்டம் அடக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி இம்முறை வடகிழக்கிலும் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளில் தமிழரசுகட்சிக்குள் சிங்கள முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டு தமிழ் தேசியத்தை கூறுபோட நினைப்பவரும் இந்த சத்தியலிங்கமே. தமிழரசு கட்சி என்ற பெயருக்கு எந்த ஒரு முஸ்லீமோ சிங்களவனோ வாக்களிக்க மாட்டான். எனினும் தமிழரின் வாக்கில் தமிழ் தேசியத்தையும் அத்துமீறிய இவர்களின் சட்டவிரோத குடியேற்றங்களையும் நியாயப்படுத்த முனைபவரும் இந்த சத்தியலிங்கமே. தமிழரசு கட்சியின் பெயரை லங்கா ஐக்கிய அரசுக் கட்சி என்று மாற்றவேண்டும்.

அண்மையில் வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வவுனியாவில் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்ட 3000 சிங்களவருக்கும் 1000க்கு மேற்பட்ட முஸ்லீம்களுக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது. இதில் ரணில், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரிஷாட்டுடன் இணைந்து அவ் உறுதிகளை வழங்கி வைத்தவரும் இந்த சத்தியலிங்கமே

இதுமட்டுமின்றி இம்முறை நகரசபை தேர்தலில் இருந்து டெலோவை அச்சுறுத்தி ஒதுங்கச் செய்ததுடன் போனஸ் ஆசனம் தருவதாக போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பல வட்டாரங்களை தமிழின அழிப்புக்கு 2009 வரை துணைபோன புளொட்டுக்கு வழங்கியுள்ளவரும் இந்த சத்தியலிங்கமே. இரத்த கறை படாத தனது கை எனக் கூறுபவர் புளொட்டின் முன்னாள் வவுனியா இராணுவ பொறுப்பாளர் தனது உறவினர் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா? அவர் இம்முறை வீட்டுச் சின்னத்தில் போட்டி இடவில்லை என்று கூறமுடியுமா?

மேலும் இம்முறை வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது உறவினர் பலரை களமிறக்கி உண்மையான தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை வீதிக்கு கொண்டு வந்தவரும் இந்த சத்தியலிங்கமே

அதுமட்டுமல்லாமல் வவுனியாவில் காணாமல் போனவர்கள் பிரச்சனை சூடுபிடித்தபோது அதனை வவுனியா நகர முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் இராசலிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா போன்றோருடன் இணைந்து அதனை குழப்பியவர்களில் சத்தியலிங்கமும் முதன்மையானவர். இதுமட்டுமின்றி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மலசலம் கழிப்பதற்காக தபாலகத்தின் பொது மலசகூடத்தை தாய்மார் பயன்படுத்திய போது அதனைத் தடுத்ததுடன் நீர் விநியோகத்தை தடுத்தவர் இந்த சத்தியலிங்கத்தின் இளைஞரணி செயலாளர் சத்தியசீலனே.

இதுமட்டுமின்றி தமிழரசு கட்சியின் பண்டாரிகுள வேட்பாளராக மக்களதும், மாணவர்களதும் மனங்களை வென்ற M.M.ரதன் ஆசிரியர் போன்றவர்களை திட்டமிட்டு ஒதுக்கிவிட்டு சுயநலமாக செயற்படும், மக்களால் வெறுக்கப்படும் வேட்பாளரை களமிறக்கியதால் வவுனியா பண்டாரிகுள மக்களின் தெரிவு இம்முறை உதயசூரியன் மட்டுமே. இச்சுமந்திரன் வவுனியா பண்டித்தனம் என அழைக்கப்படும் தனம் என்பவரின் சகோதரர் ஆவார். இவர்கள் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலடியியில் குளத்திற்குள் மண்ணை நிரவி காணி பிடித்துள்ளார்கள். இது தொடர்பில் வவுனியா நகரசபை செயலாளர் சட்டநடவடிக்கை எடுப்பாரா?

இதுமட்டுமின்றி தமிழரசுகட்சியின் மோசடிகளை மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளார்கள். சுமந்திரன் சம்பந்தன் போன்ற தமிழின விரோதிகளுக்கு வன்னியில் இடமில்லை.

இவ்வாறான நிலையில் தமது தோல்வியை மறைக்க எமது கட்சியைப் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதுடன் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கூட்டமைப்பு வன்னியில் ஆனந்த சங்கரியின் கட்சி சார்பில் யாரும் களமிறங்கவில்லை. இங்கு எமது தலைவர் சிவசக்தி ஆனந்தன் மட்டுமே தவிர சுரேஷ் பிரேமசந்திரனும் இல்லை என்பதை முன்னாள் ஊழல் அமைச்சர் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சிவசக்தி ஆனந்தனுக்காகவே களமிறங்கியுள்ளோம். இன்று கிராம மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளார்கள். ஒருபோதும் ஊழல்வாதிகளை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை இந்த உள்ளூராட்சி தேர்தல் காட்டும்.

எனவே உங்களின் கொள்கையை வைத்து தேர்தல் போட்டியிடுங்கள் அதைவிடுத்து மற்றவரை விமர்சித்து உங்களின் குறுகிய அரசியல் தனத்தை காட்ட முயலாதீர்கள். இனியாவது ஒரு அரசியல்வாதியாக திருந்தி நடக்க முயலுங்கள்.
"தமிழ் மக்களின் வெற்றியே உதயசூரியனின் வெற்றி
உங்களின் வாக்கு உதயசூரியனுக்கு மட்டுமே"
என்றும் உங்களுடன்
தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வன்னி வேட்பாளர்கள்.

முன்னாள் மாகாணசபை அமைச்சர் மீது தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு வேட்பாளர்கள் குற்றச்சாட்டு....! Reviewed by Author on January 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.