அண்மைய செய்திகள்

recent
-

உலகின் இறுதி நாட்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை...


அமெரிக்காவில் பராமரிக்கப்பட்டு வரும் டூம்ஸ்டே கடிகாரம் உலகின் இறுதி நாட்களை குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டூம்ஸ்டே கடிகாரம் இதுவரை 3 நிமிடங்களை காட்டியபோதெல்லாம் உலகின் பல்வேறு நாடுகளில் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்ட வரலாறு பதிவாகி உள்ள நிலையில், தற்போது அந்த கடிகாரமானது 2 நிமிடங்களை காட்டியுள்ளது பெரும் அழிவு காலத்தை நோக்கி உலகம் அடியெடுத்து வைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அணுஆயுத நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, அகதிகள் பிரச்னை, உள்நாட்டு கலவரங்கள் என உலகம் மிகவும் இக்கட்டான நிலையை எட்டியுள்ளது.

மட்டுமின்றி உலகத் தலைவர்களின் சுயநலம் மிக்க செயற்பாடுகள் என பெருகும் அச்சுறுத்தல்களால் உலக அழிவுக்கு இன்னும் 2 நிமிடங்களே உள்ளது என குறித்த டூம்ஸ்டே கடிகாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
1947 ஆம் ஆண்டு குறித்த கடிகாரத்தை வடிவமைத்த ஆய்வாளர்கள், மனித குலத்துக்கு எப்போது அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை துல்லியமாக கணிக்க இது பயன்படும் என்றார்கள்.
குறித்த டூம்ஸ்டே கடிகாரம் 3 நிமிடங்களை காட்டிய 1949 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் நாடு முதலாவது அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
இதேபோன்று 1953 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது முதல் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
1984 ஆம் ஆண்டு டூம்ஸ்டே கடிகாரத்தில் 3 நிமிடங்களை காட்டியபோது அமெரிக்க ரஷ்ய உறவு மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
2015 ஆம் ஆண்டு வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றவும் ஏற்பட்டது.
இதனிடையே உலக அழிவில் இருந்து தப்பித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
பதற்றமாம சூழலை தவிர்க்க வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் இறுதி நாட்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை... Reviewed by Author on January 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.